இன்று: 14-12-2019, சனி விகாரி- கார்த்திகை 28, சூரிய உதயம் - 6:21 AM

டவுன்லோட் காவிதேசம் ஆப் :     Android       IOS


நல்ல நேரம் : 10.45 AM - 11.45 AM 4.45 PM - 5.45 PM
இராகு : 9.00 AM - 10.30 AM
குளிகை : 6.00 AM - 7.30 AM 10.30 PM - 12.00 AM
எமகண்டம் : 1.30 PM - 3.00 PM
வாரசூலை : கிழக்கு
பரிகாரம் : தயிர்
திதி : திரிதியை
யோகம் : சித்தயோகம்

இன்றைய சிறப்பு

இன்று திரிதியை. புத சுக்கிரளுக்கு மத்தியில் சூரியன் வரும் காலம் பானுமத்திம தோஷம் ஆகும்.திருவில்லிக்கேனி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.


இன்றைய நட்சத்திரம்

இன்று புனர்பூசம் 05.50 AM முதல் நாளை 05.03 AM வரை பிறகு பூசம்

இன்று யாருக்கு சந்திராஷ்டமம்?

இன்று விருச்சிகம் 11.16 PM வரை பிறகு தனுசு.


கண்டங்கத்திரி வேரை அரைத்து வெள்ளாட்டுப் பாலுடன் காய்ச்சி கொடுக்க தொடர் இருமல் குணமாகும்.


இராசிபலன்

மேஷம்

இன்று குறைந்த செயலாற்றலுடன் காணப்படுவீர்கள். ஆன்மீக ஈடுபாடு மற்றும் பிரார்த்தனை மேற்கொள்வது நல்லது. தியானமும் மேற்கொள்ளலாம். பிறருடன் உரையாடும் போது கவனமாக உரையாடுங்கள்.

ரிஷபம்

உங்கள் பொறுமை சோதனைக்குள்ளாகும் நாள். இன்று திட்டமிட்டு செயலாற்ற வேண்டியது அவசியம்.பிரார்தனை மற்றும் பக்திப் பாடல்கள் கேட்பது உங்களுக்கு ஆறுதல் தரும்.

மிதுனம்

இன்று அமைதியாக இருக்க வேண்டும். நீங்கள் பதட்டப்படும்படியான சூழ்நிலைகள் உருவாகும். பிரார்ததனை மூலம் ஆறுதல் பெறலாம். உங்களுக்கு பிரியமானவர்களுடன் உரையாடும் போது பதட்டபடாமல் கவனமாக பேசுங்கள்.

கடகம்

இன்றைய நாள் சாதகமாக இருக்காது. இன்று யதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது. உங்களது பலவீனங்களை பலங்களாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.

சிம்மம்

இன்றைய நாளை உங்களுக்கு சாதமாக்கிக் கொள்ள பொறுமை தேவை. இன்று அசௌகரியங்கள் காணப்படும். இன்று திட்டங்களை தீட்டி அதனை நம்பி செயலாற்ற வேண்டியது அவசியம்.

கன்னி

இன்று விரைந்து செயலாற்றுவீர்கள். இன்றைய நாளை சிறப்பாக பயன்படுத்துவீர்கள், புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

துலாம்

உங்கள் திட்டங்கள் மற்றும் அணுகுமுறை மூலம் இன்றைய நாளால் அற்புதமான நாளாக ஆக்குவீர்கள். உங்கள் உரையாடல் திறனை மேம்படுத்தி நன்மை பெறுவீர்கள்.

விருச்சிகம்

பல தடைகளுக்கு பிறகு வெற்றியைக் காண்பீர்கள். கவலைகளை நீக்கி மனதை அமைதியாக வைத்திருங்கள்.

தனுசு

அதிர்ஷ்டக் குறைவு காரணமாக கடைசி நிமிடத்தில் சிறந்த வாய்ப்புகளை இழப்பீர்கள். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

மகரம்

இன்று சிறப்பான நாளாக இருக்கும். தைரியமும் உறுதியும் காணப்படும். உங்களிடம் சிறந்த ஆற்றல் மற்றும் திருப்தி காணப்படும்.

கும்பம்

உங்கள் கடின உழைப்பின் மூலம் உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். உங்களுக்கு பிரியமானவர்களை அழைத்து உங்கள் வீட்டில் விருந்து கொடுப்பீர்கள். இது உங்களுக்கு உற்சாகத்தை தரும்.

மீனம்

இன்று பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள். சூடான விவாதத்தை தடுக்க உரையாடுவதற்கு முன் ஒன்றிக்கு இரண்டு முறை நன்கு யோசிக்கவும். முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை தவிர்க்கவும்.

காவிதேசம் வீடியோக்கள்