Astrologer jayamsaravanan Call Now : 99622 23535

Services

எந்த மாதிரியான ஆலோசனைக்கு எம்மை தொடர்பு கொள்ளலாம்?

பிறந்த குழந்தை ஜாதகம் முதல் அனைத்து ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளலாம்,குறிப்பிட்டு சொல்வதென்றால்...

 • எதிர்காலம், கல்வி, வேலை வாய்ப்பு, வேலை கிடைத்தாலும் அதில் உண்டாகும் இடர்பாடுகள், அதனால் உண்டாகும் மன அழுத்தம்
 • வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சொந்தவீடு பாக்கியம், திருமணம், திருமணத்தடை, கணவன் மனைவி உறவில் விரிசல், இருதார தோஷம்,வழக்கு வியாஜ்ஜியங்கள்
 • பூர்வீகசொத்து பிரச்சனை, குலதெய்வம் எது?
 • சகோதர ஒற்றுமை
 • குழந்தை பாக்கியம், குழந்தை பாக்யத்தில் தடை அல்லது தாமதம், தத்தெடுத்தல் பற்றிய சிந்தனை,
 • வீடு வாகனம் பாக்யம் உண்டா? எனில் எப்போது கனியும், கடன் பிரச்சனை, கடன் எப்போது அடையும்,கொடுத்த கடன் எப்போது கிடைக்கும்?
 • சொந்த தொழிலா அல்லது உத்தியோகமா
 • கூட்டுத்தொழிலா? சொந்தமாக நடத்துவதா?
 • நோய் பற்றிய பயம்! நோய் தீரும் காலம்!
 • சுகபோக வாழ்க்கையா அல்லது இறுதிவரை போராட்டமான வாழ்க்கையா? காதல் கை கூடுமா? அல்லது காதல் தோல்வியா? தாய், தந்தை நலன் என அனைத்தும் ஆராய்ந்து பதில் தரப்படும்,
 • பிரசன்ன ஆருடம்முறையில் ஒரு கேள்வி! ஒரு பதில் ( பிரசன்னத்தில் ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் பெற முடியும்) அதாவது நினைத்த காரியம் நடக்குமா? நடக்காதா? என்பதற்கான பதில், கிடைத்த விடை எத்தனை நாட்களில் பலன் தரும், போன்ற ஆருடங்கள்.
 • எண்கணிதம் .....இது நியூமரலாஜி இல்லை.... ஜாதக ரீதியாக கிரக பலன் கொண்டு அமைத்துத்தரப்படும் எண்கணிதம் ஆகும்,
 • அதிரஷ்ட நிறம், அதிர்ஷ்ட கிழமை, அதிர்ஷ்ட நாள், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, போன்றவை கணித்து தரப்படும்,
 • உங்கள் எதிர்காலம்
 • கல்வி
 • தொழில்
 • உத்தியோகம்
 • புத்திர பாக்யம்
 • வீடு, வாகன யோகம்
 • கலைத்துறை வாய்ப்பு
 • திருமணம்
 • வெளிநாடு செல்லும் யோகம்
 • கடன், நோய் பற்றிய பயம்
 • மறுமணம்
 • ஜாமக்கோள் பிரசன்னம்
 • எண்கணிதம்
 • வாஸ்து

மிக முக்கியமாக “ ஜாதகம் இல்லாதவர்க்கும் ஜாதகம் கணித்து “ பலன் துல்லியமாக கூறப்படும்.என்னுடைய ஜோதிடம் பற்றிய தொடர் கனடா நாட்டில் இருந்து வெளிவரும் " செந்தாமரை " செய்திதாளிலும், மின்இதழிலிலும் வெளிவருகிறது,

About Me

ஜெயம்.சரவணன் என்னும் யாம் கடந்த 12 வருடங்களாக ஜோதிட சேவை செய்துவருகிறேன், எம்முடைய ஜோதிட பலன்கள் பாரம்பரியம் மற்றும் நாடி ஜோதிட முறையாகும். ஜோதிடத்தில் நாம் தருகின்ற பலன்களானது ஏதோ மதிப்பீடு செய்து பலன் உரைப்பதில்லை, மாறாக நாள், மாதம், வருடம் கணக்கிட்டு துல்லியமாக பலன்களை உரைத்தல் எம் சிறப்பு,இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை, ஐயன் “எழுத்துச்சித்தர்” பாலகுமாரன் ஐயா அவர்கள் தன் முகநூல் பக்கத்தில் விவரித்திருக்கிறார், அவர் இட்ட பதிவு இங்கே உள்ளது.

மேலும் நான் அறிந்த ஜோதிடத்தை என்னுள்ளே வைத்துக்கொள்ளும் சுயநலவாதி இல்லை, ஜோதிட ஆசிரியராக இதுவரை 250 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த கலையை பயிற்றுவித்திருக்கிறேன், இப்போதும் பயிற்சி தருகிறேன்.எம்முடைய ஜோதிட பரிகாரங்கள் மிக எளிமையானது, இன்னும் சொல்லப்போனால் 10,20 ரூபாய் அளவிலேயே இருக்கும் எளிய பரிகாரங்கள், இந்த எளிய பரிகாரங்கள் செய்து பயன்பெற்றோர் ஆயிரக்கணக்கில்.

ஆம், யாம் பரிந்துரைப்பது ஆலயப்பரிகாரங்கள் மட்டுமே, அதிலும் ஜோதிடத்தில் இருக்கும் பஞ்சபூத தன்மைக்கு தகுந்தவாறு இருக்கும்.

உதாரணமாக ஒருவருக்கு மேச ராசி என்றால் அவருக்கு எளிமையாக விளக்கு ஏற்றும் பரிகாரம் மட்டுமே பரிந்துரைப்பேன், காரணம் மேசம் என்பது நெருப்பு ராசி எனவே விளக்கு ஏற்றும் பரிகாரம்.

இதுவே ரிசபம் என்றால் அது நில ராசி எனவே மரம் நடுதல், அல்லது மரத்திற்கு நீர் ஊற்றுதல்,அன்ன தானம் தருதல், இப்படி எளிமையாக இருக்கும்.

மிதுனம் என்றால் காற்று ராசி எனவே மந்திரங்கள், பாடல்கள் படித்தல் என்ற பரிகாரம் தான் உதவி செய்யும்,

கடகம் என்றால் நீர்ராசி எனவே தெய்வத்தின் அபிசேகத்திற்கு பன்னீர், நெய், எண்ணெய், இளநீர் என்ற திரவ பொருட்கள் உபயம் செய்வதே சரியான பரிகாரம் ஆகும்,

அதுபோல் நான்தோஷங்களை காட்டி யாரையும் பயம் ஏற்படுத்துவதில்லை, மாறாக அந்த தோஷத்திற்கான நிவாரணத்தை மட்டுமே பரிந்துரைப்பேன்,

இன்னும் விபரங்கள் வேண்டும் எனில் “தமிழ் இந்து ஆன்லைன்” பத்திரிக்கையில் “ஜோதிடம் அறிவோம்” என்ற தொடரில் முழுமையான விபரங்களை தந்திருக்கிறேன், படித்து பார்த்து ஜோதிடத்தின் உண்மையை அறிந்து கொள்ளுங்கள்,google search செய்தாலும் அறிந்து கொள்ளலாம். இன்னும் சில வரிகள்.... நான் என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் எவரிடமும் “நீங்கள் எதற்காக வந்துள்ளீர்கள், என்ன கேள்வி” என்று தான் கேட்டதேயில்லை,

மாறாக வந்தவர் “இந்த பிரச்சனை அல்லது இந்த காரணத்திற்காத்தான் வந்துள்ளார்” என்பதை ஜாதகத்தை பார்த்த ஒரு வினாடியில் தெரிவித்து விடுவேன், வந்தவர்களுக்கு அது ஆச்சர்யமாக இருக்கும். இதை என்னிடம் வந்த வாடிக்கையாளர்கள் நன்கறிவர்,

நான் ஜோதிடம், பிரசன்னம், திருமணப்பொருத்தம், எதிர்காலத்தில் என்ன? என்பதை “உள்ளது உள்ளபடியே” அப்பட்டமாக வைளிப்படுத்திவிடுவேன்,


“ஒருமுறை வாருங்கள்; மாற்றத்தை உணர்வீர்கள்”


Face book link - for The Hindu tamil write up 50 weeks need to display in gallery or other coloums. Click Here

Call Now : 99622 23535