ஜென்ம நட்சத்திர குறியீடுகளும் அதன் பயன்களும்


nachathirakovilgal

நம் ஒவ்வொருவருக்கும் நம்ஜாதகத்தில் ஜென்ம நட்சத்திரம் என்று ஒன்று அந்தந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு ஜோதிடத்தின்படி ஒரு குறியீடு இருக்கும். ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் பொறித்த உருவப்படங்களை அல்லது பொருட்களை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருவோமாயின் நாம் நினைத்த காரியத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பது சாஸ்திர நம்பிக்கை.

27 நட்சத்திரங்களும் அதற்குரிய குறியீடுகளும்:-

வரிசை எண் நட்சத்திரங்களின் பெயர் குறியீடு
1 அசுவினி குதிரைத்தலை, குதிரைஉருவம்
2 பரணி மண்பாத்திரம், அடுப்பு, முக்கோணவடிவம்
3 கார்த்திகை கத்தி, வாள், ஹோமதீஜூவாலை
4 ரோகிணி தேர், வண்டி, கோவில், ஆலமரம், சக்கரம்.
5 மிருகசீரிடம் மான்தலை, தேங்காயின்கண்
6 திருவாதிரை மனிததலை, வைரம், நீர்த்துளி
7 புனர்பூசம் வில், அம்புக்கூடு
8 பூசம் தாமரை, புடலம்பூ, அம்பு, பசுவின்மடி
9 ஆயிலியம் சர்ப்பம், அம்மி.
10 மகம் வீடு, பல்லக்கு, நுகம்
11 பூரம் கட்டிலின்இருகால்கள், சங்கு, மெத்தை
12 உத்திரம் கட்டில்கால்கள், மெத்தை.
13 அஸ்தம் கைகள், உள்ளங்கை
14 சித்திரை முத்து, ரத்தினக்கற்கள்.
15 சுவாதி புல்லின்நுனி, அசையும்தீபச்சுடர்.
16 விசாகம் முறம், தோரணம், பானைசெய்யும்சக்கரம்.
17 அனுஷம் குடை, மலரும்தாமரை, வில்வளைவு
18 கேட்டை குடை, குண்டலம், ஈட்டி
19 மூலம் அங்குசம், சிங்கத்தின்வால், யானைதும்பிக்கை.
20 பூராடம் விசிறி, முறம், கட்டில்கால்கள்
21 உத்திராடம் யானைதந்தம், மெத்தைவிரிப்பு, கட்டில்கால்கள்
22 திருவோணம் காது, மூன்றுபாதச்சுவடுகள், அம்பு.
23 அவிட்டம் மிருதங்கம், உடுக்கை
24 சதயம் பூங்கொத்து, வட்டவடிவம்.
25 பூரட்டாதி கட்டிலின்இருகால்கள், வாள், இருமனிதமுகங்கள்
26 உத்திரட்டாதி கட்டில்கால்கள், இரட்டையர்கள்.
27 ரேவதி மீன், மத்தளம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மகாபாரத போரில் வெற்றி அடையும் போது அவரது ஜென்ம நட்சத்திரமான ரோகினிக்கு உரிய குறியீடான தேர் அவருடன் இருந்தது. பகவான் ஸ்ரீராமரின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் அவரின் ஜென்ம நட்சத்திரமான புனர்பூசத்திற்குரிய குறியீடான வில் காரணமாக இருந்திருக்கிறது. வேல் எறிவதில் வித்தகர் தர்மர் என்பது அனைவரும் அறிந்ததே! அவரின் ஜென்ம நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்திற்கு உரிய குறியீடு ஈட்டி என்பதும் தகுந்த சான்றாகும்.


உலகை ஈரடியால் அளந்ததும் மகாபலியின் தலையில் மூன்றாவது பாதத்தை எடுத்து வைத்து வெற்றி கண்டவாமனனின் நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்தின் குறியீடு மூன்று பாதச்சுவடுகள்தான். அனுமாரின் வாலும், அவரின் ‘கதை’ சிங்கவால் வடிவத்தில் இருப்பதும் அவருடைய ஜென்ம நட்சத்திரமான மூல நட்சத்திரத்திற்குரிய குறியீடான சிங்கத்தின் வாலை குறிப்பிடுவது போல் இருக்கிறது. அது போல் லக்ஷ்மி தேவியின் பூசநட்சத்திரத்திற்குரிய குறியீடான தாமரையும், பசுவின் மடியும் அவரது வெற்றிக்கு சாட்சியாக அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது. எம்பெருமான் சிவனின் கழுத்தில் இருக்கும் மாலை மனிதத் தலையின் மண்டையோடுதான். அவரின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய குறியீடு மனிதத்தலை என்பதும் இதற்குசாட்சி.


இதைப்போன்றே நம் தசாகாலத்திற்கேற்ப அந்தந்த கிரகத்தினுடைய வாகன படங்களை நம் வீட்டில் மாட்டி வைத்திருந்தாலும் நமக்கு நற்பலன்கள் கிடைக்கும்.

நவகிரகங்களும் அதன் வாகனங்களும்

1.சூரியன் – மயில், தேர்.

2.சந்திரன் – முத்து, விமானம்.

3.செவ்வாய் – அன்னம்.

4.புதன் – குதிரை, யானை.

5.சுக்கிரன் – கருடன்.

6.சனி – காகம்

7.ராகு – ஆடு

8.கேது – சிங்கம்.


அனைவருக்கும் வெற்றியடைவதில் தான் வாழ்க்கையின் சந்தோசமே இருக்கிறது. எவ்வளவுதான் முயற்சித்தாலும் பலருக்கு வெற்றிக்கனியை அடைவதில் பெரும் சிக்கல் இருக்கும். எந்த விஷயமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதில் வெற்றி பெற விடாமுயற்சி தேவை. தொடர்ந்து ஒரு செயலை சோர்வுறாமல் முயற்சித்தால் தான் வெற்றியை அடைய முடியும் அதில் எந்தசந்தேகமும் இல்லை. அதனுடன் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகளை நம் அன்றாட வாழ்வில் புழங்கும் ஏதோ ஒரு இடத்திலோ அல்லது நம் உடம்பிலோ இருக்குமாறு செய்தால் எளிதில் வெற்றியை அடைய முடியும்.

இதையும் படிக்கலாமே

இது போன்ற மேலும் பல ஆன்மிக தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

To Share :