700 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் - அதிசய நந்தி கோயில்

இந்தியாவில் பல வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளதோடு, வியக்க வைக்கும் பல கட்டிடக் கலை கொண்ட கோயில்கள் ஏராளம். அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள ஒரு நந்தி கோயிலில், நந்தியின் வாயிலிருந்து தொடர்ச்சியாக நீர் வடியும் அதிசயம் நிகழ்ந்து வருகின்றது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ளது. ஸ்ரீ தக்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி திருக்கோயில்.

Nandi Tirtha Temple Malleswaram Bangalore

கோயிலின் சிறப்பு:

இந்த கோயிலின் சிறப்பே அங்கு அமைந்துள்ள நந்தியின் வாயில் இருந்து எப்போதும் நீர் ஊற்றாக ஊறி கொட்டிக் கொண்டிருப்பது தான்.

அதே போல் எல்லா சிவாலயங்களிலும், நந்தி சிவபெருமானுக்கு எதிராக தான் அமைக்கப்பட்டிருப்பார். ஆனால் இந்த ஸ்ரீ தக்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி திருக்கோயிலில், நந்தி பெருமானோ சிவ லிங்கத்திற்கு மேல் உள்ள தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது

நந்தி தீ ர்த்தம் :

அதோடு அந்த நந்தியிலிருந்து வடியும் தீர்த்தம், சிவ லிங்கத்தின் தலையில் விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சிவனை அபிஷேகம் செய்வது போன்று அந்த தீர்த்தம் விழுந்து பின்னர் அந்த நீர், அங்குள்ள தெப்பக்குளத்தில் சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதிசயம்:

நதியின் வாயில் எப்படி நீர் ஊறுகின்றது என்பது இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது கிட்டத்தட்ட 700 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த கோயில் அமைந்துள்ள இடம் அப்பகுதியிலேயே மிக தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் இந்த அதிசயம் நிகழ்வாதாக் கூறுகின்றனர்.

Nandi Tirtha Temple Malleswaram Bangalore

சன்னதிகள்:

நந்தி தீர்த்தம் விழும் சிவலிங்கத்திற்கு என்று தனி சன்னதியோடு, இந்த கோயிலில் விநாயகருக்கு என்று தனி சன்னதியும், நவகிரகத்திற்கு என்று சன்னதிகள் உண்டு இந்த கோயில் மொத்தமே ஒரு குளத்தை சுற்றி முடிந்து விடுகின்றது.

எப்படி செல்வது ?

விமானம் மூலம்:

இந்த கோயிலை காண விமானம் மூலம் வர நினைப்பவர்கள் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திற்கு வந்தடைய வேண்டும். அங்கிருந்து வெறும் 5 கிமீ தொலைவில் உள்ள இந்த கோயிலுக்கு பல நகர பேருந்துகள் செல்கின்றன

சாலை வழி:

பெங்களூரு நகரத்திற்குள்ளேயே இந்த ஸ்ரீ தக்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி திருக்கோயில் அமைந்துள்ளதால், சாலை மார்க்கமாக வந்தால், வெறும் 5 கிமீ தூரத்தில் உள்ள கோயிலை எளிதாக அடைய முடியும

ரயில் வழி:

பல்வேறு மாநிலங்களிலிருந்து பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றது. அதனால் மெஜஸ்டிக் ரயில் நிலையத்திற்கு வந்தால் அதன் எதிரே உள்ள மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் கோயிலை அடையலாமTo Share :