அகப்பேய் சித்தர்

Agapei sidhar

தன்னையறியவேணும் அகப்பேய்
சாராமற்சாரவேணும்
பின்னையறிவதெல்லாம் அகப்பேய்
பேயறிவாகுமடி.
பிச்சையெடுத்தாலும் அகப்பேய்
பிறவிதொலையாதே
இச்சையற்றவிடம் அகப்பேய்
எம்மிறைகண்டாயே.
பொய்யென்றுசொல்லாதே அகப்பேய்
போக்குவரத்துதானே
மெய்யென்றுசொன்னவர்கள அகப்பேய்
வீடுபெறலாமே.

To Share :