அகஸ்தியர் – திருவனந்தபுரம்
Akathiyar, thiruvananthapuram

மோட்சமது பெறுவ தற்குச் சூட்சஞ் சொன்னேன் 
மோசமுடன் பொய்களவு கொலை செய்யாதே; 
காய்ச்சலுடன் கோபத்தைத் தள்ளிப் போடு 
காசினியிற் புண்ணியத்தைக் கருதிக் கொள்ளு; 
பாய்ச்சலது பாயாதே பாழ்போ காதே 
பலவேத சாஸ்திரமும் பாரு பாரு; 
ஏச்சலில்லா தவர்பிழைக்கச் செய்த மார்க்கம்
என்மக்கா ளெண்ணி யெண்ணிப் பாரீர் நீரே!

To Share :