புனர்பூசம் - வாணியம்பாடி அதிதீஸ்வரர் கோயில்

arulmigu athitheeshwarar temple
27 nakshatra temples in tamil

தலபெருமை:

இத்தலத்து ஈசனை வணங்கினால் செல்வம் பெருகும் * வாழ்வு சிறக்கும்* தொழில் விருத்தி அடையும்

அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோவில் – வாணியம்பாடி- புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகாரக்கோவில்.

இந்த கோவில் வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி என்ற ஊரில் உள்ளது. 1800 –ம் வருடம் பழமை வாய்ந்தது. ராமபிரான் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம். ஆதலால் இந்த நட்சத்திரக்காரர்கள் கண்ணியமும் கவர்ச்சியும் நேர்மையும் கொண்டவர்களாக இருப்பது இயல்பு என்கின்றனர். இத்தலம் பல்லவ பேரரசர்களால் கட்டப்பட்டது. மேற்கு ராஜ கோபுரம் மூன்று அடுக்குகள் கொண்டது. கிழக்கு கோபுரம் ஐந்து அடுக்குகள் கொண்டது.இங்குள்ள சிவபெருமான் அதிதீஸ்வரர் மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். எப்பொழுதுமே மேற்கு நோக்கி காட்சி தரும் சிவபெருமானை வழி பட்டால் ஆயிரம் கிழக்கு பார்த்த கோவிலை வழிபட்ட பலன் உண்டு என்கின்றனர். இங்குள்ள அம்மையின் பெயர் அருள்மிகு பெரிய நாயகி ஆகும். இத்தல விருட்சம் வில்வமரம்.

27 nakshatra temples in tamil

தல வரலாறு

ஒரு முறை பிரம்மா சரஸ்வதியிடம் உலகத்தில் உயிர்களை படைப்பது என் செயல், ஆகவே நான்தான் மிகவும் உய்ர்ந்தவன் என்றாரம். எனவேதான் எல்லோரும் “பிரம்மாம் விஷ்ணு சிவன்” என்று வரிசைப்படுத்துகின்றனர் என்றாராம். இதைக்கேட்ட சரஸ்வதி தேவி (கலைமகள்) சிரித்துவிட்டார். இதனால் ஆத்திரம் கொண்ட பிரம்மா, கோபத்தில் சரஸ்வதி தேவியை பேசும் சக்தி இழக்கச்செய்து சபித்துவிட்டார். இதனால் வருத்தம் அடைந்த அம்மை, பூலோகம் வந்து, சிருங்கேரி என்னும் தலத்தில் வந்து தவம் செய்தார். வாணியைப்பிரிந்த பிரம்மா,வருத்தம் கொண்டு தன் மனைவியைத்தேடி கண்டுபிடிக்க முயன்றார். ஒரு யாகம் செய்து தேவர்களை திருப்தி செய்து, அவர்கள் மூலம் வாணியின் இருப்பிடம் கண்டுபிடிக்கலாம் என்று எண்ணினார். ஆனால் மனைவி இல்லாமல் செய்யும் யாகம் பலன் இல்லாது போகும் என்று தேவர்கள் கூறி விட்டனர். இதனால் சோகம் கொண்டு பல திசைகளிலும் தேடி அலைந்து கடைசியில் சிருங்கேரியில் வாணியின் இருப்பிடத்தை கண்டுபிடித்தார். வாணியிடம் தனது கோபத்தினால் நடந்தவற்றை பொருட்படுத்தாமல் தன்னோடு வரும்படி கேட்டுக்கொண்டார். ஆனாலும் பேசும் சக்தி இழந்த வாணியால் பேச இயலவில்லை.வரும் வழியில் பாலாற்றின் வடகரையில்,ஒரு சிவன் கோவில் இருந்ததைக்கண்டு அங்கு சென்று சிவபெருமானை வழிபட்டு அங்கேயே தங்கினர். இதைக்கண்டு மகிழ்ந்த சிவபெருமானும் பார்வதியும் தோன்றி வாணியைப் பாடும்படி கூற, தன் இனிய குரல் கிடைக்கப்பெற்று பாடினார். பின்னர் பேசும் சக்தியும் பெற்றார். வாணி பாடிய திருத்தலம் என்பதால் இந்த தலம் வாணியம்பாடி என்று அழைக்கப்பட்டது என்கின்றனர்.

அதிதீஸ்வரர் திருக்கோயில்

மேலும் ஒரு புராண வரலாறு. காசிய முனிவரின் மனைவி அதிதி. இவர் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவள். எனவே ஒவ்வொரு புனர்பூச நட்சத்திரத்தன்றும் இந்த தலத்தில் விரதம் ஏற்று தேவர்களைப்பெற்று எடுத்தாளாம். எனவே இத்தலத்து ஈஸ்வரனுக்கு அதிதீஸ்வரர் என்ற பெயர் உண்டாயிற்று என்கின்றனர். ஆகவே, புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களால் முடிந்த அளவு, எத்தனை முறை வர முடியுமோ அத்தனை முறை வந்து இத்தலத்து ஈசனை வணங்கினால் செல்வம் பெருகும், வாழ்வு சிறக்கும், தொழில் விருத்தி அடையும் என்பது உறுதி என்று கூறுகின்றனர். புது மனை புகுதல், வாடகை வீடு குடி புகுதல் போன்ற சுப கரரியங்களை இத்தலத்தில் வழி பட்டு சென்று தொடங்கினால், விருத்தி ஆகும். வாணி வழிபட்டு அருள் கிடைக்கப்பெற்ற தலம் ஆதலால், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பு முன்பும் தேர்வு எழுதச்செல்லுகையிலும் இங்கு வந்து சென்றால், சிறப்பான பலன் கிட்டும், மதிப்பெண் அதிகம், கிடைக்கும், என்பதும் நம்பிக்கை. மேலும், திக்கு வாய் உள்ளோர், பேசும் திறன் அற்றவர்கள் மனப்பூர்வமாக வழி பட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். பெரிய சாப்பாட்டு விடுதி (ஹோட்டல்) நடத்துபவர்கள் அடிக்கடி இங்கு வந்து, அதிதீஸ்வரரை வழிபட்டு அன்னதானம் செய்து, தங்கள் தொழிலில் ஏதேனும் குறை பாடுகள் இருந்தால் நீங்க வேண்டுகின்றனர்.இங்குள்ள சிவதீர்த்தம் நல்ல சக்தி வாய்ந்தது என்கின்றனர்.

27 nakshatra temples in tamil

பொது தகவல்:

புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவா ன குணங்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். பிறரைப் பார்த்தவுடன் அவர்களின் இயல்புகளை தெரிந்து கொள்வர். நல்ல பேச்சு ஆற்றல் பெற்றவர்களாயிருப்பர். பிற இடங்களை சுற்றி பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர்களாயிருப்பர். நன்றி உணர்ச்சி அதிகம் பெற்றவர்கள். தங்கள் மனதில் உள்ளவற்றை, வெளியில் சொல்ல மாட்டார்கள். நல்ல சாதுர்யமாக பேசும் திறமை உள்ளவர்களாயிருப்பர்.

27 nakshatra temples in tamil

சிறப்பம்சம்:

இத்தலத்தில் சிவபெருமான் மேற்கு நோக்கி அருள் பாலிப்பதால் சிறப்பான பலன் உண்டு. இங்கு விநாயகர், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு சன்னதி உள்ளது. தட்சிணாமூர்த்தி மான் மழு ஏந்தி, யோக பட்டையுடனும் சின் முத்திரையில் நந்தி மீது அமர்ந்து இருப்பது மற்ற தலங்களில் இல்லாத சிறப்பு.

சிவபெருமானுக்கு பால், தேன், நதி நீர், அன்னம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தம் பேச இயலாதவர்கள் அருந்தினால் நல்ல பலன் கிட்டும் என்கின்றனர். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தோச நிவர்த்தி ஆகும் என்பது நம்பிக்கை.

27 nakshatra temples in tamil

திருவிழா:

  • சித்திரை பிரமோத்சவம், மஹா சிவராத்திரி, திருவாதிரை, பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகின்றன.

" அற்புதத் தெய்வம் இதனின் மற்று உண்டோ
அன்பொடு தன்னை அஞ்சு எழுத்தின்
சொற்பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும்
தொண்டருக்கு எண்திசைக் கனகம்
பற்பதக் குவையும் பைம்பொன் மாளிகையும்
பவளவாய் அவர்பனை மார்பும்
கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை
கொண்ட சோழேச்சரத் தானே "

27 nakshatra temples in tamil

திறக்கும் நேரம்:

  • கோவில் காலை 6.30 மணி முதல், பகல் 11 மணிவரையிலும் மாலை, 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்துள்ளது.
27 nakshatra temples in tamil

முகவரி:

  • வேலூர்- கிருஷ்ணகிரி சாலையில் 67 கிலோமீட்டர் தொலைவில் வாணியம்பாடி உள்ளது.
27 nakshatra temples in tamil

தொலை பேசி எண்:

  • 9994107395, 04174-226652


To Share :