ஸ்ரீ மத் பக்த ப்ரஹலாத மஹாத்மியம்

bhaktha prahlada tamil

பக்த ப்ரஹலாதரை பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம் சில விஷயங்களை பற்றி தான். பல விஷயங்கள் பலருக்கும் தெரியாது. அது பற்றி தெரிய வேண்டுமென்றால் பல் வேறு நூல்களை ஆராய வேண்டும். நாம் பக்தியுடன் இறைவனை துதித்தால் நமக்கு அதை செய்வதற்குரிய சக்தியும், பலமும் கிடைக்கும். இந்த சிறிய நூலினை நான் எழுதுவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால்,பக்த ப்ரஹலாதரை பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம் அவரின் நாராயண பக்தியும், இரண்யகசிபுவை அழித்து ப்ரஹலாதரை நரசிம்மர் ஆட்கொண்டது மட்டும் தான். ஆனால் அதற்கும் மேல் அவரின் வாழ்க்கை வரலாறு மிக முக்கியமானது. அதனால் சிலவற்றை நான் இங்கு தொகுத்து வழங்கிறேன். அதற்கு முன்பு அவரின் வாழ்வின் முதல் கட்ட சுருக்கமான தொகுப்பு.

சங்கு கர்ண தேவர் என்பவர் ஸ்ரீ சத்ய லோகத்தில் ஒரு தேவராய் அவதரித்தார். அவரின் அன்றாட பணி தினந்தோறும் பூவுலகில் இருந்து வாசமுள்ள நறுமலர்களை பறித்து அதனை நாராயண பூஜைக்காக ஸ்ரீ ப்ரம்ம தேவரிடம் சமர்ப்பித்து வந்துள்ளார். ஒரு நாள் பூஜைக்கான பூவை பூவுலகில் இருந்து கொண்டு வருவதற்கு தாமதமாகியது. அதனால் அவரை பிரம்ம தேவர் அசுரர் குலத்தில் பிறக்க வேண்டும் என்று சபித்து விட்டார். அதன் பிறகு அவர் ஸ்ரீ ப்ரஹலாதராய் இப் பூவுலகில் கிருத யுகத்தில் பிறந்தார்.

ப்ரஹலாதர் ஸ்ரீ ஹரியின் மீது மிகுந்த பக்தி கொண்டு மற்ற அசுர சிறுவர் துணையுடன் ஸ்ரீ ஹரி பூஜை மற்றும் பஜனை செய்து வந்துள்ளார். இதனை கண்டு அவரின் தந்தையான இரண்யகசிபு கோபமுற்று அவரை அழிக்க பல்வேறு முயற்சி செய்ததும், அதன் பின்பு ஸ்ரீ ஹரி, ஸ்ரீ நரசிம்மராய் வந்து இரண்ய கசிபுவை அழித்து, ப்ரஹலாதரை காத்து அவரை அரசனாக்கினார்.

prahlada maharaja

நீண்ட காலத்திற்கு முன்பு அதாவது முதலாம் யுகமான க்ருத யுகத்தில், நர நாராயணர் என்ற இரு தபஸ்விகள் கையில் ஆயுதத்துடன் தவம் இயற்றி கொண்டிருந்தனர். அப்போது அவ்விடம் வந்த ப்ரஹலாதர் அவர்கள் யாரென்று வினவினார். அதற்கு அவர்கள் பதில் ஏதும் கூறாமல் தவம் இயற்றி கொண்டிருந்தனர். அதனால் ப்ரஹலாதர் கோபம் கொண்டு அவர்களுடன் இடைவிடாது பல நாட்கள் போர் புரிந்தவாறு இருந்துள்ளார். அவர்களும் தங்கள் கைகளில் தர்ப்பையை ஏந்தி போர் புரிந்தனர். பல நாட்கள் ஆகியும் அவர்களை வெல்ல முடியாதலால் ப்ரஹலாதர் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியை த்யானம் செய்தார். உடனே நரசிம்ம மூர்த்தியும் ப்ரத்யக்ஷம் ஆகி நான் வேறு நர நாராயணர் வேறு இல்லை. இருவரும் ஒன்று தான் என்றார். ப்ரஹலாதரும் தனது தவறினை புரிந்து கொண்டு அவர்களை வணங்கி அவ்விடம் விட்டு அகன்றார்.

மற்றுமொரு சமயத்தில் ப்ரஹலாதர் ஆண்டு வந்த பிரதேசத்திற்கு சில வழிப்போக்கர்கள் வழி தவறி வந்தனர். அவர்கள் அங்கிருந்த அசுரர்களை பார்த்து மிகவும் பயந்தனர். ஆனால் அவ்வசுரர்கள் அவர்களின் பயத்தை தெளிவித்து அவர்களை தங்கள் ராஜாவான ப்ரஹலாத மஹாராஜாவிடம் கூட்டிச் சென்றனர். ப்ரஹலாதர் அவர்களை பார்த்து மகிழ்வுற்று அவர்களின் நலம் விசாரித்து அவர்களை நன்கு உபசரித்தார். அவரின் அழகையும் தேஜஸையும் பார்த்து வியந்த அவ்வழிப்போக்கர்கள் அவரை பாராட்டி விட்டு சென்றனர்.

ப்ரஹலாதரின் நல்லாட்சியில் அனைத்து மக்களும் துன்பம், துயரற்று இருந்தனர். அவரின் ஆட்சி ராம ராஜ்யம் போன்று மிகவும் நன்றாக இருந்தது. யாவரும் உடல் ஆரோக்கியத்துடன், செல்வ செழிப்புடன் இருந்தனர். ஒரு தருணத்தில், ப்ரஹலாதரின் பெரியப்பா மகனான ஒரு அசுரன் அவரை ஜெயித்து கொடுங்கோலாட்சி நடத்தி வந்தான். ப்ரஹலாதரும் காட்டிற்கு சென்று ஸ்ரீ நரசிம்மரை குறித்து தவமியற்றி வந்துள்ளார். நரசிம்ம மூர்த்தியும் தக்க சமயத்தில் உன் கவலை அகலும் என்று தெரிவித்தார். சில காலம் கழித்து ப்ரஹலாதரும் அவ்வசுரனை வென்று மீண்டும் நல்லாட்சியை தொடர ஆரம்பித்தார்.

prahlada

ப்ரஹலாதர் ஆட்சியில் எல்லா இடத்திலும் நாராயண மந்திரம் ஒலித்தன. ஹரி நாம சங்கீர்த்தனம் எல்லா இடத்திலும் பரவின. யாவரும் இன்பமுடன் நாராயண பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் , ப்ரஹலாதர் இப்போதைய பாகிஸ்தானில், முல்தான் என்னுமிடத்தில், ஒரு நரசிம்மர் கோவிலை உருவாக்கினார். பல்வேறு மக்களும் அதனை வணங்கி பயன் பெற்றனர். அத்தகைய கோவில் சில ஆண்டுகளுக்கு முன்னால், சில பாகிஸ்தானியர்களால் சேதப்படுத்தப்பட்டது.

ப்ரஹலாதர் தினமும் ஆயிரக்கணக்கான ப்ராஹ்மணர்களுக்கு உணவளித்துவந்துள்ளார். அமிர்தம் வேண்டி பாற்கடல் கடைந்தபோது அவ்விடம் ப்ரஹலாதரும் இருந்துள்ளார். ப்ரஹலாதர் நாராயணரின் இரு அவதாரமாகிய வாமன மற்றும் நரசிம்ம அவதாரங்களை பார்த்துள்ளார்.

ப்ரஹலாதர் தன பேரனான மஹாபலியுடன் சுதல லோகத்தில் நீண்ட நெடுங்காலம் இருந்துள்ளார். ஆகமத்தில் கூறியுள்ளபடி நரசிம்மரை வணங்குவதற்கு முன்பு ப்ரஹலாதரை வணங்கினால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். பல நரசிம்ம கோவில்களில் ஸ்ரீ ப்ரஹலாத விக்கிரகம் இருப்பதை இன்றும் நாம் பார்க்கலாம் . ப்ரஹலாதரின் நாமாவை சொல்ல சொல்ல சகல வினைகளும் நம்மை விட்டு விலகி விடும்.

நரசிம்மர் இரண்ய வதத்திற்கு பிறகு ஸ்ரீ ப்ரஹலாதருக்கு நீ நானாகவே விளங்கி வாழ்வாயாக என்று அருள் புரிந்தார் . அதன் பொருள் எனக்கு கட்டுப்படும் அனைத்தும் உனக்கும் கட்டுப்படும் என்பதாகும். அத்தகைய சிறப்பு அவருக்கு உண்டு. ஆழ்வார்களில் முதன்மையானவர் ஸ்ரீ ப்ரஹலாத ஆழ்வார் ஆவார் .

ப்ரஹலாதர் ஸ்ரீ பாஹ்லிகர், ஸ்ரீ வ்யாஸராஜர், ஸ்ரீ ராகவேந்திரர் என்ற அவதாரங்களை எடுத்துள்ளார்.

ஓம் ஸ்ரீ ப்ரஹலாத பாலகாய நம என்று கூற வேண்டும். ப்ரஹலாதரின் நாமாவை சொல்ல சொல்ல, ஸ்ரீ ஹரி பக்தியும் தானாகவே பிறக்கும். ஹரியும், ப்ரஹலாதரும் வெவ்வேறில்லை. இருவரும் ஒன்று தான். இவரின் இதயத்திலே அவரும், அவரின் இதயத்திலே இவரும் என்று அருள் பாலித்து வருகின்றனர்.

ப்ரஹலாத சாலிசா

பிரகலாதா நீ என்றென்றும் ஸ்ரீ மத் நரசிம்ம பெருமானின் இருதயத்தில் வீற்றிருக்கிறாய். உன்னுடைய பக்தியினால் தான் நரசிம்மரின் உக்ரம் தணிந்து சாந்த ஸ்வரூபி ஆனார். உன்னுடைய நாமத்தினால் அனைவரின் அனைத்து பாபங்களும் விலகுகின்றன. நீயே அனைவருக்கும் துணைவன். அனைத்து பக்தர்கள் சார்பிலும் நீயே ஸ்ரீ நரசிம்மரிடம் வேண்டி அனைத்து கஷ்டங்களையும் போக்குவாயாக. அனைவர்க்கும் வஜ்ர தேகத்தையும் ,மன அமைதியும், நீண்ட ஆயிளும் தருவாயாக. நரசிம்மர் வசிக்கும் வைகுண்டத்தை நீயே காவல் காக்கின்றாய். உன் அனுமதி இல்லாமல் யாரும் அங்கு செல்ல முடியாது. நரசிம்மரால் சூட்டப்பட்டுள்ள கிரீடத்துடன் காவலாளியாக விளங்குகிறாய். நீயே நரசிம்மரால் ஆசிர்வதிக்கப்பட்ட பாலகனாக அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகனாக விளங்குகிறாய். உன்னால் ஆசிர்வதிக்க பட்ட அனைவரும் நலமாக வாழ்வார்கள். இதில் எந்த வித சந்தேகமும் இல்லை. நீயே சிரஞ்சீவி. உனக்கு முடிவில்லை. உன்னுடைய புகழ் என்றென்றும் இவ்வுலகத்தில் பரவியிருக்கும். அனுமார் ராம ஜபம் சொல்வதை போல் நீ ஹரி நாம ஜெபத்தை சொல்கின்றாய்.

இந்த ப்ரஹலாத மஹாத்மியத்தை படிப்பவரும் கேட்பவரும் நீண்ட ஆயுளுடனும்,நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ்வார்கள்.

ப்ரஹலாதா போற்றி - 18

1. ஓம் ஸ்ரீ பக்த ப்ரஹல்ஹாதய நமஹ
2. ஓம் ஸ்ரீ நாராயண பக்தனே போற்றி
3. ஓம் ஸ்ரீ ஹிரண்யகசிபுவின் மைந்தனே போற்றி
4. ஓம் ஸ்ரீ ப்ரஹலாதாய பாலகனே போற்றி
5. ஓம் ஸ்ரீ சங்குகர்ண தேவரே போற்றி
6. ஓம் ஸ்ரீ பாஹ்லிக ராஜரே போற்றி
7. ஓம் ஸ்ரீ வ்யாஸராஜரே போற்றி
8. ஓம் ஸ்ரீ ராகவேந்திரரே போற்றி
9. ஓம் ஸ்ரீ அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகரே போற்றி
10. ஓம் ஸ்ரீ நரசிம்ம பிரியரே போற்றி
11. ஓம் ஸ்ரீ சகல இன்பங்களையும் அளிப்பவரே போற்றி
12. ஓம் ஸ்ரீ துனபங்களை களைபவரே போற்றி
13. ஓம் ஸ்ரீ நவகிரஹ தோஷங்களை தீர்ப்பவரே போற்றி
14. ஓம் ஸ்ரீ மந்த்ராலய மஹானே போற்றி
15. ஓம் ஸ்ரீ மானம் காப்பவரே போற்றி
16. ஓம் ஸ்ரீ பிருந்தாவன வாஸரே போற்றி
17. ஓம் ஸ்ரீ ஆய கலைகளையும் அறிந்தவரே போற்றி
18. ஓம் ஸ்ரீ தியான ஸ்வரூபியே போற்றி போற்றி போற்றி.

ஹோலியின் வரலாறு

ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சூரிநாம், கயானா, தென்னாப்பிரிக்கா, திரினிதாத், இங்கிலாந்து, மொரீசியசுமற்றும் ஃபிஜி போன்ற இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் விரிவாகக் கொண்டாடப்படுகின்றது. இட்ந்தத்யு வின் மேற்கு வங்காளம்,வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த-உற்சவம் ("வசந்தகாலத் திருவிழா") என அழைக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, விருந்தாவன், நந்தகோன், பர்சனா ஆகிய நகரங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகை காலத்தில் அவை நடைபெறும் 16 நாட்களும் இந்த நகரங்கள் சுற்றுலாத்தளங்களாக இருக்கும்.

history of holi

துல்ஹேதி, துலாந்தி அல்லது துலேந்தி எனவும் அழைக்கப்படும் ஹோலியின் முக்கிய நாளில் மக்கள், ஒருவர் மீதொருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு கொண்டாடுகின்றனர். அந்த நாளுக்கு முன்னதாக பெரிய நெருப்புகளை மூட்டுவார்கள். இது ஹோலிகா தகனம் (ஹோலிகாவை எரித்தல்) அல்லது சோட்டி ஹோலி (சிறிய ஹோலி) எனவும் அழைக்கப்படும். இரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா இளம் பிரகல்லாதனை நெருப்பில் போட முயன்ற போது அதிலிருந்து வியக்கத்தக்க வகையில் அவர் தப்பித்ததன் நினைவாக நெருப்புகள் மூட்டப்படுகின்றன. ஹோலிகா எரிந்தாள், ஆனால் கடவுள் விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரகல்லாதன், தனது அசைக்க முடியாத தெய்வபக்தியின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தான். ஹோலிகா தகனம், ஆந்திர பிரதேசத்தில் காம தகனம் அல்லது காமன் எரிப்பு எனக் குறிப்பிடப்படுகின்றது.

பஞ்சமிக்கு (முழு நிலவிற்கு பிறகு ஐந்தாவது நாள்) சில நாட்கள் கழித்து வருகின்ற அரங்கபஞ்சமியுடன் இவ் வண்ணப் பண்டிகை முடிவடையும்.

துருவ நட்சத்திரம்

துருவன் உத்தனபாதன் என்ற மன்னனுக்கு மகனாக பிறந்தான். தன்னுடைய சிற்றன்னையால் அவமதிக்கப்பட்டு காட்டிற்குச் சென்று கடுமையான தவம் செய்து ஸ்ரீ மன் நாராயணனின் மகிமையால் கடுமையான தவம் செய்து துருவ நட்சத்திரனாய் விண்ணில் இன்றும் ப்ரகாசிக்கின்றான் நட்சத்திரமாக .

வானில் ஜொலிக்கும் சகல நட்சத்திரத்திற்கும் மேலானவன் துருவன் நட்சத்திரம் . அத்தகைய துருவ நட்சத்திரத்தை வேண்டி கொண்டால் , நமக்காக சகல நன்மைகளையும் ஸ்ரீ ஹரியிடம் கேட்டு செய்வார் . இவரது பக்தி பக்த ப்ரஹலாதரின் பக்திக்கு நிகரானது . அவர் பிரளய காலத்திலும் அழிவில்லாமல் என்றும் நித்ய சூரியாய் வானில் ஜொலிக்கின்றார்.

thuruvan

அவர் ஸ்ரீமன் நாராயணரிடம் வரம் வேண்டும் போதும் தனக்கு என்று எந்த வரமும் கேட்கவில்லை. அவர் ஹரியிடம் நிறைந்த பக்தி ஒன்றே போதும் என்றே கேட்டார். ஆனால் ஸ்ரீஹரியானவர், அவருக்கு வானில் மின்னும் நட்சத்திரமாக ஜொலிக்க வரம் கொடுத்தார் . அது தான் உண்மையான பக்தி நிலை .

இதன் கருத்து என்னவென்றால் நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று இறைவனுக்கு தெரியும் . அதனால் நாம் இது வேண்டும் , அது வேண்டும் என்று கேட்பதற்கு பதிலாக எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று உனக்கு நன்றாக தெரியும் , அதனால் தக்க சமயத்தில் அதனை நிறைவேற்று என்று வேண்டினால் , கடவளும் தக்க சமயத்தில் நமக்கு கொடுக்க வேண்டியதை கொடுப்பார் . இதில் எந்தவிதமான சந்தேகமும் நமக்கு வரக்கூடாது.

thuruvan

ஓம் ஸ்ரீ துருவாய நமஹ என்று சொல்லி அவரை வேண்டிக் கொள்ள வேண்டும் .நமக்கு வேண்டியதை ஸ்ரீ ஹரியிடம் கேட்டு தக்க சமயத்தில் அதனை நிறைவேற்றுவார் . பக்திக்கு இலக்கணமாக விளங்குபவர் ஸ்ரீ துருவர் .

துருவ சாலிசா

ஓம் துருவ நட்சத்திர மண்டல தலைவனே, நீயே சகல நட்சத்திரத்திலும் மேலானவன். உன்னுடைய புகழ் சகல லோகங்களிலும் பரவியுள்ளது . விஷ்ணுவின் பரம பக்தனான நீயே எங்களுக்கு நல்ல குணத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருவாயாக .

அழிவில்லாத நட்சத்திர மண்டல தலைவனே, உன்னுடைய ஆற்றல் அளவிட முடியாதது. வானத்தில் உயர்ந்த இடத்தில் குடி கொண்டுள்ள நீயே எங்களுக்கு மோட்ச மார்க்கத்தை அடைய உதவி புரிய வேண்டும். எங்களை எப்போதும் நல் வழி படுத்துதல் வேண்டும். உன்னிடத்தில் எங்களுக்கு குறையாத பக்தி இருக்க அருள் புரிய வேண்டும். உந்தன் பாத கமலத்தில் நாங்கள் சரண் அடைந்தோம்.

துருவா போற்றி 18

ஓம் ஸ்ரீ துருவாய நமஹ போற்றி
ஓம் ஸ்ரீ ஹரி பக்தனே போற்றி
ஓம் துருவ நட்சத்திரமே போற்றி
ஓம் ஸ்ரீ பாதராஜரே போற்றி
ஓம் வானில் ஜொலிக்கும் நட்சத்திரமே போற்றி
ஓம் ஆபத் பாந்தனே போற்றி
ஓம் அனாதை ரட்சகனே போற்றி
ஓம் உத்தனபாதன் மைந்தா போற்றி
ஓம் நட்சத்திர மண்டல தலைவா போற்றி
ஓம் உத்தம குணம் கொண்டவனே போற்றி
ஓம் சகலரின் கவலைகளையும் தீர்ப்பவனே போற்றி
ஓம் தங்க நிறம் கொண்டவனே போற்றி
ஓம் பத்திக்கு இலக்கணமாக விளங்குபவனே போற்றி
ஓம் சகல நோய்களையும் தீர்ப்பவனே போற்றி
ஓம் ஈகை குணம் கொண்டவனே போற்றி
ஓம் அன்னதான பிரியனே போற்றி
ஓம் சகல வேதங்களையும் அறிந்தவனே போற்றி
ஓம் ஆய கலைகளையும் அறிந்தவனே போற்றி, போற்றி, போற்றி.

இப்படியாக ஸ்ரீ துருவர் தன்னிடத்திலே சகல நற் குணங்களை கொண்டு , சகலருக்கும் நன்மைகளை செய்து வருகிறார். அவர் நாம் எப்போது அவரை வேண்டுவோம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த துருவனின் மகிமைகளை படிப்போரும் , கேட்போரும் சகல நன்மைகளையும் அடைவார் என்பதில் எந்த ஒரு ஐயமும் வேண்டாம் .

மார்க்கண்டேய மஹரிஷி

மிருகண்டு முனிவர் மருத்துவவதியைத் திருமணம் செய்தார். நீண்டகாலமாக அவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தது. சிவபெருமானை மனமுருகித் தொழ அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மார்க்கண்டேயர் எனப் பெயர் சூட்டிமகிழ்ந்தனர் மிருகண்டு முனிவரும் மருத்துவவதியும் ஜோதிடம் பார்க்கப்பட்டபோது மார்க்கண்டேயன் நீண்டகாலம் உயிர்வாழமாட்டான் பதினாறு வயதில் அவன் இறந்துவிடுவான் என்று கூறப்பட்டது. மற்ற ஞானிகளும் அவ்வாறுதான் நடக்கும் என்றனர். பெற்றோர் அழுதனர், புலம்பினர், விதியை வெல்லமுடியாது என்று மனம் சாந்தியடைந்தாலும் பதினாறு வயதில் மார்க்கண்டேயர் இறந்துவிடுவார் என நினைத்து வேதனைப்பட்டனர். மார்க்கண்டேயர் வளந்தார். அவர் நாட்டமெல்லாம் சிவபூஜையில் தான் இருந்தது. சிவபெருமானிடம் மார்க்கண்டேயன் பூரணமாகச் சரணாகதி அடைந்தான். பதினாறு வயது வந்தடைந்து மார்க்கண்டேயர் சிவபூசையில் தன்னை மறந்து உட்கார்ந்து விடுகின்றார். அவரது உயிரை எடுக்க எமதூதர்கள் வருகின்றனர். ஆனால் மார்கண்டேயனிடம் நெருங்கமுடியவில்லை. இறுதியில் எமதர்மனே எருமைக்கடா மீது வருகின்றார். உயிர்வாங்க பாசக் கயிற்றினை வீசுகின்றான். என்ன ஆச்சரியம் உக்கிரமூர்தியாகச் சிவபெருமான் தோன்றி காலனை எட்டி உதைக்கின்றார். எமதர்மன் மூர்ச்சையாகி கீழே சாய்கின்றார். பூமாதேவியின் வேண்டுகோளுக்கிணங்க எமதர்மனை சிவபெருமான் மன்னித்து மூர்ச்சை தெளியவைக்கின்றார். என்றும் பதினாறு வயதுடன் சீரஞ்சீவியாக மார்க்கண்டேயன் வாழ அம்பலத்தரசர் அருள்பாலிக்கின்றார்.

maarkandeyan

மார்க்கண்டேயர் எமனை வென்று என்றும் பாலகனாய் வாழ்கின்றார் . அவர் மிகுந்த சிவ பக்தியுடன் வாழ்ந்தவர். அவர் பல காலம் கடந்த பிறகும் இன்றும் நித்ய சிரஞ்சீவியாய் வாழ்ந்து வருகிறார்.

மார்க்கண்டேய சாலிசா

என்றும் இன்றும் நித்ய சிரஞ்சீவியாய் விளங்கும் மார்க்கண்டேய மகரிஷிக்கு எங்களுடைய நமஸ்காரங்கள். ஓ மகிமை பொருந்திய மகரிஷியே , நீயே யமனையே வென்ற மாபெரும் பக்தன். என்றும் பதினாறாய் நித்ய சிரஞ்சீவியாய் வாழ்கின்றாய். உன்னுடைய பக்தி அளவிட முடியாதது. ஜீவன் முக்தராய் விளங்கும் நீயே எங்கள் அனைவரையும் காப்பாயாக. ஐந்து துர் குணங்களான காம , குரோத , லோப , மோஹ , மதமாச்சரியங்களை வென்றவனே எங்களை நல் வழிபடுத்த வேண்டுகிறோம். உன்னிடத்தில் எங்களுக்கு ஒரு இடம் கொடுப்பாயாக.

மார்கண்டேயா போற்றி 18

1 ஓம் மிருகண்டு முனிவர் மைந்தா போற்றி
2 ஓம் எமனை வென்றவனே போற்றி
3 ஓம் சிவ பக்தனே போற்றி
4 ஓம் களங்கம் இல்லாதவனே போற்றி
5 ஓம் ஈகை குணம் கொண்டவனே போற்றி
6 ஓம் மார்கண்டேய மகரிஷியே போற்றி
7 ஓம் சகல ஸித்திகளும் அறிந்தவனே போற்றி
8 ஓம் அன்னதான பிரியனே போற்றி
9 ஓம் பக்தர்களுக்கு சிவனின் அருளாசியுடன் அநுக்கிரகம் செய்பவனே போற்றி
10 ஓம் சகலரின் சகல பாபங்களையும் களைவனே போற்றி
11 ஓம் காம , குரோத , லோப , மோஹ , மதமாச்சரியங்களை வென்றவனே போற்றி.
12 ஓம் தவக்கோலம் பூண்டவனே போற்றி
13 ஓம் ஆய கலைகளையும் அறிந்தவனே போற்றி
14 ஓம் அன்புள்ளம் கொண்டவனே போற்றி
15 ஓம் அனைத்தையும் அறிந்தவனே போற்றி
16 ஓம் ஒப்பற்ற அழகுடையவனே போற்றி
17 ஓம் மனதிற்கு சாந்தி தருபவனே போற்றி
18 ஓம் மோட்சத்தை அருள்பவனே போற்றி, போற்றி, போற்றி.

இந்த மார்க்கண்டேயரின் திவ்ய சரிதத்தை கேட்பவரும் , படிப்பவரும் சகல நன்மைகளையும் அடைவர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வர கூடாது.

பாம்பு கடவுள் மானசா தேவி

Maanasa Devi

நாக தேவதையாக கருதப்படும் மானசா தேவியை வங்காளம் மற்றும் இந்தியாவின் இதர வட கிழக்கு மாநிலங்களில் வசிப்பவர்கள் வழிப்பட்டு வருகின்றனர். பூமியில் உள்ள பாம்புகள அனைத்தையும் மானசா தேவி தான் கட்டுப்படுத்துகிறார் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதே போல் அவரை வழிப்பட்டால் பாம்புக்கடி குணமாகும் என்றும் நம்பப்படுகிறது.

புராணத்தின் படி, சிவபெருமானின் மகளே மானசா தேவி. இருப்பினும் அவர் காஷ்யபா முனிவரின் மகள் என்றும் சிவபெருமானின் தூரத்து உறவு என்றும் சமயத்திரு நூல்கள் கூறுகிறது. அவர் வாசுகியின் சகோதரி மற்றும் ஜரட்கரு முனிவரின் மனைவியுமாவார். புராணங்களின் படி, மானசா தேவியை ஜரட்கரு முனிவருக்கு ஒரு நிபந்தனையின் அடிப்படையில் மணம் முடித்து வைத்தார் காஷ்யப் முனிவர். அதாவது, என்றாவது தன் பேச்சை மீறி மானசா நடந்தால், அன்று அவளை கைவிட்டு விடுவதாக ஜரட்கரு கூறினார். ஒரு முறை காலையில் மிகவும் தாமதமாக ஜரட்கருவை எழுப்பிவிட்டார் மானசா தேவி. அதனால் தன் காலை வழிப்பாட்டுக்கு தாமதமாக சென்றார். இதனால் கடுஞ்சினம் கொண்ட அவர், மானசாவை கைவிட்டார். சிறிது காலம் கழித்து மீண்டும் வந்தார். அவர்களுக்கு அஸ்திகா என்ற மகனும் இருந்தான்.

நாகங்களின் கடவுளாக விளங்குகிறார் மானசா தேவி. ஒரு முறை கடுமையான விஷத்தில் இருந்து சிவபெருமானை மானசா காப்பாற்றியுள்ளார் என வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். தன் பக்தர்கள் மீது மிகுந்த பாசம் மற்றும் கருணையை கொண்டுள்ளார் அவர். தன்னை வழிப்பட மறுப்பவர்களிடம் அதே அளவிற்கு சீற்றத்தையும் காண்பிப்பார்.

பொதுவாக மழைக்காலத்தில் தான் மானசா தேவியை வணங்குவார்கள். அதற்கு காரணம் இந்நேரத்தில் தான் பாம்புகள் மிகவும் முனைப்புடன் செயல்படும். மானசா தேவிக்கான சடங்குகளை இந்தியாவில் உள்ள வட கிழக்கு வட்டாரத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக பின்பற்றுகின்றனர். கருவளம், பாம்பு கடியில் இருந்து குணமடைய மற்றும் பெரியம்மை, கொப்புளிப்பான் போன்ற வியாதிகளில் இருந்து குணமடையவும் இவரை வணங்குகின்றனர்.

நாகர்கள்

naagarkal

நாகர்கள் எனும் பெயரை அடிகடி நாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.அனால் யாரும் இவர்கள் யார் என்று பெரிதாக கூறியதில்லை .

புராணங்களை பொறுத்தவரை

ராவணின் இளைய சகோதரன் நாக லோகத்தின் தலைவனாக இருந்தான் என்று ராமாயணம் கூறுகிறது .

மகாபாரததிலோ நாகர்கள் இருந்த இடத்தில்தான் , அவர்களை அழித்து விட்டு இந்திரப்ரஸ்தம் எனும் பாண்டவர்களுக்கான நகரம் உருவாகபடுகிறது .

அதே கதையில்தான் பீமன் சிறுவனாக இருக்கும் பொழுது , துரியோதனன் அவனுக்கு விஷம் கொடுத்து கொன்று நதியில் வீசும் பொழுது , நாகர்களின் தலைவனால் காப்பாற்றபடுகிறான் .

பிறகு மகாபாரத யுத்தத்தில் , கர்ணனுக்கு நாகஸ்திரம் கொடுக்கிறான் நாகர்களின் தலைவன் .

கிருஷ்ணா புராணத்தில் சிறுவயதில் கிருஷ்ணன் காளியா எனும் பாம்பை வெல்கிறான் .

கிருஷ்ணனின் அண்ணனாக வரும் பலராமன் முற்பிறவியில் ஆதிஷசன் எனும் பாம்பாக இருந்தவர் என்றும் அப்புராணம் கூறுகிறது .

தேவர்களுக்கு தேவாமிர்தம் எடுக்க உதவியது வாசுகி எனும் பாம்பு.

கார்கோடகன் எனும் பாம்பானது வானிலை அறிந்து கூறக்கூடியது என்றும் புராணங்கள் கூறுகிறது .

முடிந்தவரை பாம்புகள் வாழும் இடம்தான் பாதாள லோஹம் என்றும் நாக லோகம் என்றும் வழங்கப்பட்டுள்ளது .

இவையெல்லாம் நாகர்கள் குறித்து புராணங்கள் கூறுவன .

கருட பஞ்சமி!

karuda panchami

ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்குத் தாயாகவும், வினதை அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை, கத்ருவுக்கும், வினதைக்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து நின்றது. அந்தப் போட்டியில் ஜெயிப்பவருக்குத் தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்துக் கொண்டனர். போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். கருடன் கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தித் தனது தாயை எப்படியாவது அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான். அப்போது கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டுவந்து தந்தால், அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாகச் சொன்னாள். கருடன், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று மகிழ்ச்சியடைந்து, தன் தாயை வணங்கித் தேவலோகம் சென்றான். தேவலோகத்தில், காவல் புரிந்துகொண்டிருந்த தேவர்களுக்கும், கருடனுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. இறுதியில், கருடன் வெற்றி பெற்று, தேவேந்திரனை வணங்கி, அவனிடமிருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்றுவந்து கத்ருவிடம் கொடுத்தான். மூவருக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி, ஆனந்தமாக வாழ வழி செய்தான், கருடன். அந்தக் கருடன் பிறந்த தினம் கருட பஞ்சமி என்று அழைக்கப்படுகின்றது.

பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இது என்ன கருட பஞ்சமியன்று ஆதிசேஷனுக்கு பூஜையா என்று வியக்கின்றீர்களா? வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள் தானே நாகங்கள் அவர்கள் செய்த சூழ்ச்சியினால் தானே வினதை அடிமையாக நேர்ந்தது அன்னையின் அடிமைத்தளையை களைய கருடன் தேவ லோகம் சென்று அமிர்தம் கொண்டு வர நேர்ந்தது அப்போதுதான் பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்தது பின் பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது எனவே கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே.

அன்றைய தினம் நோன்பிருந்து கவுரி அம்மனை நாகவடிவில் ஆராதிக்க வேண்டும். அன்று வடை, பாயசம், முக்கியமாக எண்ணெய் கொழுக்கட்டையோ அல்லது பால் கொழுக்கட்டையோ செய்து நாகருக்கு பூஜைசெய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை, பாக்குடன் நைவேத்யம் செய்ய வேண்டும். இந்த பூஜை முடிந்ததும் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். சரடுகளில் 10 முடி போட்டு, பூஜை செய்யும் இடத்தில் அம்மனுக்கு வலது பக்கம் வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது அம்மனுக்கு ஒரு சரடு மட்டும் சாற்ற வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைவரும் வலது கையில் சரடு கட்டிக் கொள்ளலாம். அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால், பழம், கொழுக்கட்டை எடுத்துக் கொண்டு போய், புற்றில் பால்விட்டு, பழம், கொழுக்கட்டை வைத்து விட்டு வரலாம். அருகில் புற்று ஏதும் இல்லா விடில் வீட்டில் பூஜையில் வைத்திருக்கும் நாகத்தின் மேலேயே சிறிது பால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த நோன்பு கூடப் பிறந்த சகோதரர்களின் நலத்தையும் வளத்தையும் கோரும் நோன்பாகும். ஆதலால் அவர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு பணமோ அல்லது துணிகளோ வைத்து, தாம்பூலம் கொடுத்து, பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி பெற வேண்டும். சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.

கஷ்யப முனிவருக்கு வினதை, கத்ரு என்று இரண்டு மனைவியர். இவர்களில் வினதை கருடனையும், கத்ரு பாம்புகளையும் பெற்றெடுத்தனர். கத்ருவுக்கு வினதையைப் பிடிக்காது. அதனால், அவளை தனக்கு அடிமையாக்க நினைத்து, தந்திரமாக போட்டிக்கு அழைப்பு விடுத்தாள். அக்கா…நமக்குள் ஒரு போட்டி… பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட, உச்சைஸ்ரவஸ் என்ற குதிரை என்ன நிறம் தெரியுமா? என்றாள். இதிலென்ன சந்தேகம்; அது வெள்ளை நிறம்… என்றாள் வினதை. இல்லையில்லை, அதன் வால் மட்டும் கருப்பு… என்று கத்ரு கூற, வினதை அதை மறுத்தாள். சரி…நாம் ஒரு பந்தயம் கட்டுவோம். யார் சொல்வது தவறோ, அவர் மற்றவர்க்கு அடிமையாக வேண்டும்… என்றாள் கத்ரு. வினதையும் இதற்கு ஒப்புக் கொண்டாள். கத்ரு, ரகசியமாக தன் பாம்பு குழந்தைகளில் கருப்பானவற்றை அழைத்து, நீங்கள் போய் குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ளுங்கள்… என, உத்தரவு போட்டாள். பாம்புகளும் அவ்வாறே குதிரையின் வாலில் சுற்றிக் கொண்டன.

vinathai

வினதை, கத்ருவுக்கு அடிமையானாள். இதை அறியாத கருடன், வினதையிடம், அம்மா… நீ, ஏன் சின்னம்மாவுக்கு எடுபிடி வேலை செய்கிறாய்? அவள் எங்கு சென்றாலும், அவள் பல்லக்கை சுமந்து செல்கிறாயே… என்று, வேதனையுடன் கேட்டது. நடந்த விஷயத்தைச் சொன்னாள் வினதை. உடனே கருடன், சின்னம்மா கத்ருவிடம் சென்று,என் தாயை விடுதலை செய்ய நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டது. கத்ருவோ கடுமையான நிபந்தனை ஒன்றை விதித்தாள். கருடா… நீ தேவலோகம் சென்று, இந்திரனிடம் உள்ள அமுதக்கலசத்தைப் பெற்று வந்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால், உன் அன்னையை விடுவிப்பேன்… என்றாள். கருடன் தேலோகம் சென்று இந்திரனிடம் போரிட்டது. இந்திரனின் பலம் வாய்ந்த வஜ்ராயுதத்தை செயல்பட விடாமல் செய்து, அவனைத் தோற்கடித்தது. இருப்பினும், இந்திரா… இந்த வஜ்ராயுதம் முனிவரின் எலும்பால் ஆனது என்பதை நான் அறிவேன். அதற்கு மதிப்பளித்து, இதை உன்னிடமே திரும்பத் தருகிறேன். அதற்கு பிரதியுபகாரமாக எனக்கு, அமுதம் கொடு. என் தாயை விடுவிக்கவே இதைக் கேட்கிறேன்… என்றது. மகிழ்ந்த இந்திரன், அமுதத்தை கொடுத்தான். அதை கத்ருவிடம் ஒப்படைத்தது கருடன். அப்போது, குதிரையின் வாலில் சுற்றியிருந்த கருப்பு பாம்புகள், அமுதத்தை குடிக்கும் ஆசையில் கீழே இறங்கின. வால் கருப்பாக மாறியதன் ரகசியம் வெளிப்பட்டு விட்டதால் அதிர்ந்தாள் கத்ரு. இருந்தாலும், வினதை அவளை மன்னித்தாள். எதிரிக்கும் அன்பு செய்த வினதைக்கும், கருடனுக்கும் திருமால் காட்சி தந்து, தாயைக் காத்த தனயனை, தன் வாகனமாக ஏற்றார். கருடன் பிறந்த நாளை, ஆடி மாதம் பஞ்சமி திதியில் ஒரு சாரார் கருட பஞ்சமியாகவும், ஆடி சுவாதி நட்சத்திரத்தை ஒரு சாரார் பட்சிராஜர் திருநட்சத்திரமாகவும் அதாவது, கருட ஜெயந்தியாகவும் கொண்டாடுவர்.

பன்னெடுங்காலமாகவே கருட உபாஸனை பாரத பூமி எங்கும் சிறந்து விளங்கி வந்திருப்பதைப் பண்டைய நூல்களும் சரித்திரச் சான்றுகளும் மெய்ப்பிக்கின்றன. கருட பகவானின் பெருமைகளாகவும் அடியார்களுக்கு இரங்கும் அருள் உள்ளத்தையும் கருட புராணம் விரிவாகக் கூறுகிறது. கருட உபாசனை புரிவதில் பல சிறப்புகள் உண்டு. விஷ்ணு அம்சமான கருடனை வழிபடுவதன் மூலம் திருமாலின் அருள் கிடைக்கிறது. கருடன் திருமாலின் மெய்த் தொண்டர் என்று கூறப்படுபவர். விஷ்ணு பக்தர்கள் கருடோபாஸனையின் மூலம் தாம் திருமாலின் தொண்டருக்கும் தொண்டர் என்பதை நிரூபிக்கின்றனர். வைணவக் கோயில் பலவற்றில் கருடனுக்குத் தனி சன்னதிகள் உள்ளன. பூரி ஸ்ரீ ஜகந்நாதர் ஆலயத்தில் தூண் ஒன்றில் உள்ள கருட மூர்த்தம் பிரசித்தி பெற்றது. அக்கருட மூர்த்தியை வழிபட்டு விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் நீங்கி நலம் பெறுகின்றனர். தென்னகத்திலும் பல தலங்கள் கருடனின் பெருமைக்குச் சான்றாக விளங்குகின்றன. தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள திருவகீந்திபுரம் கருட க்ஷேத்திரம் எனப்படுகிறது. இங்குதான் பகவானின் தாகம் தீர்த்த கருட நதி என்ற பெயர் கொண்ட கெடில நதியை உண்டாக்கினார் என்று கூறப்படுகிறது. கருடோபாஸனையின் மூலம் ஸ்ரீவேதாந்த தேசிகர் கவித்துவம் பெற்றதாகவும் கூறுவர். கருட பகவானுக்கு இரண்டு கரங்கள். நான்கு கால்களும் உண்டு. அருள் ததும்பும் திருமுகம் கவலைக் குறியே இல்லாதவர். தனது இரண்டு இறக்கைகளை விரித்து மண்டலமிட்டு வானத்தில் பறப்பவர். சிறகுகளை விட உடல் பருத்திருக்கும். குண்டலங்களைக் காதுகளில் அணிந்தவர். வளைந்த புருவங்கள். உருண்டை கன்னங்கள், நீண்ட மூக்கு, வெளுப்பான முகம் உடையவர். கருடனின் நித்திய வாசஸ்தலம் திருப்பாற்கடலாகும். அவர்க்குரிய மண்டலத்திலும் ஞானிகளின் உள்ளங்களிலும் இருப்பவர். பாமர மக்களைக் காப்பதில் திருமால் போன்றவர். நாள்தோறும் கருட தரிசனம் ஒவ்வொரு வகையில் பலன் தருமானாலும் வியாழன் மாலையிலும் சனி காலையிலும் கருட தரிசனம் மிகவும் சிறப்பானது என்று வசந்தராஜ சகுன விஸ்தரம் என்ற நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கருட தரிசனத்தை விடக் கருடத்வனி மிகவும் மங்கலகரம். காருடம் தர்சனம் புண்யம் ததோபித்வனி ருச்யதே என்பது பெரியோர் வாக்கு. பதினாறு வகையான மங்கள வாத்தியங்களின் பலன் கருடத்வனியில் உள்ளது சில்பா மிருதம் என்ற நூலில் கோயில்களில் நடக்கும் கும்பாபிஷேக சமயத்தில் விமான கலசாபிஷேகத்தின் போது இரட்டைக் கருடன் மேலே வட்டமிடுவது நல்லது எனவும். கருட தரிசனமும் கருடத்வனியுமே கங்காபிஷேகத்திற்கு முகூர்த்தமாகும் என்று சொல்லப்பட்டுள்ளது என்பார்கள். கருடத்வனி கேட்கும்போது மங்களானி பவந்து என்று சொல்வதும், கருட தரிசனத்தின்போது குங்குமாங் கித வர்ணாய குந்தேந்துதவளா யச விஷ்ணு வாஹ நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம என்ற சுலோகத்தைச் சொல்வதும் வழக்கம்.

garuda manthra

ஆயிரக்கணக்கான மந்திரங்களில் கருட மந்திரமான கருட பஞ்சாக்ஷரிக்குத் தனிச் சிறப்பு உண்டு. இது இம்மை மறுமைப் பலன்களை விரைவில் தரவல்லது. இதற்கு விசுவாமித்திரர் ரிஷி லக்ஷ்மி நாராயணனுடன் கூடிய கருட தேவதை என்பார்கள். கருட பஞ்சமி நாளன்று கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லி கருட பகவானை வழிபடலாம்.

To Share :
இந்து மத சிறப்பு

ஹிந்துமதம் என்பது மனிதனுக்கு தெரிந்த மிகப் பழமையான...

108 திவ்ய தேசங்கள்

அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில், அழகர் கோவில்,...