இந்த 2 ராசிக்காரர்களுக்கும் அள்ளித்தரும் நாட்டிலேயே ஒரே மும்முக லிங்கம்!


அண்டமெல்லாம் காக்கும் கடவுளான சிவபெருமானின் ஒவ்வொரு அசைவிலேயே இந்த மானுடம் இயக்கம்பெருகிறது. சிவன் என்றாலே மங்களத்தைக் குறிக்கும் சொல்லாக கருதப்படுகிறது. இந்தச் சிவ வழிபாடு தொன்றுதொட்டே, அதாவது ஆதி மனிதன் தோன்றிய காலம் தொட்டே இருந்து வருகிறது. இச்சிவபெருமானின் வழிபாடு, சிவலிங்க வழிபாடு, நடராஜர் வழிபாடு, சோமாஸ்கந்தர் வழிபாடு என பரவலாக உள்ளது நாம் அறிந்ததே. இதில் லிங்கவடிவ சிவபெருமான் ஒரு முகலிங்கம், இரு முகலிங்கம், மும்முக லிங்கம், சதுர் முகம் எனப்படும் நான்கு முகலிங்கம், ஐந்து முக லிங்கம் என வகைப்படுத்தப்படுகிறது. இதில், பஞ்சமுக லிங்கம் கொண்ட சிவதலம் இந்தியாவின் வடக்கே நேபாளம், தெற்கே காளகஸ்தியில் உள்ளது. ஆனால், மும்முகம் கொண்ட லிங்கம் எங்கே உள்ளது என அறிவீர்களா ?. இந்தியாவிலேயே நம் தமிழகத்தில் தான் இந்த மும்முக லிங்கம் கொண்ட சிவதலம் அமைந்துள்ளது. மேலும், இச்சிவலிங்கத்தை எந்த ராசிக்காரர்கள் வழிபட்டால் செல்வம் மிக்வராக, நோய்நொடி அற்றவராக, இந்த அண்டத்தில் புகழ்மிக்கவராக உருவெடுப்பார்கள் என பார்க்கலாம் வாங்க.

எங்கே உள்ளது ?

விழுப்புரம் மாவட்டம், திருவக்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு சந்திர மௌலீசுவரர் கோவில். விழுப்புரத்தில் இருந்து திருச்சி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தால் குறிஞ்சிப்பாடியை அடையலாம். அங்கிருந்து திருக்கனூர் சாலையில் பிடரிபட்டு, சிதலம்பட்டு நான்குரோடு சந்திப்பில் இருந்து சிதலம்பட்டு, கொடுக்கூர் சாலையில் சில மீட்டர் பயணித்தால் இத்தலத்தை அடையலாம். இதன் மொத்த பயண தூரம் சுமார் 33 கிலோ மீட்டர் ஆகும். விழுப்புரத்தில் இருந்து கோழியனூர், திருபுவணி, கொடுக்கூர் வழியாகவும் சுமார் 30 கிலோ முட்டர் பயணம் செய்து இந்த சிவன் தலத்திற்கு செல்லலாம்.

கோவில் சிறப்பு

சிவனின் தேவாரப் பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் இத்தலம் 263-வது தேவாரத் தலம் ஆகும். சந்திரமேளலீஸ்வரர் ஆலயத்தில் மூலவராக மும்முக லிங்க வடிவில் சிவபெருமாள் அருள்பாலிக்கிறார். இதுபோன்ற மும்முகம் கொண்ட சிவலிங்க வழிபாடு இந்தியாவில் வேறெங்கும் காணக்கிடைக்காத ஒன்றாகும். இத்தலத்தில் காளி கோவிலின் எதிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது. இது கண்ட லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த லிங்கம், கோடைக் காலத்தில் குளிர்ச்சியாகவும், மழைக் காலத்தில் லிங்கத்தின் மேல் பகுதியில் நீர்த்துளிகள் மழைத் துளியைப் போல படிவதைக் காண முடியும்.

திருவிழா

சந்திரமேளலீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியன்று வீதியுலா உற்சம் நடைபெறுகிறது. சித்திரை வருடப் பிறப்பு, ஆடிக் கார்த்திகை, தைழுச ஆகிய விசேச நாட்களில் இத்தலத்தில் உள்ள வக்கிர காளி அம்மனுக்கு சிறப்பு அபிசேக பூஜைகள் நடத்தப்படுகின்றன.

கோவில் நடை திறப்பு

திருவக்கரை அருள்மிகு சந்திர மேளலீஸவரர் திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் இத்தலத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிபாடு

கடக ராசிக்கு அதிபதியாக இருப்பவர் சந்திரன். சந்திரன் ஆயக்கலைகள் அறுபத்து நான்குக்கும், தாய்க்கும் உரிய கிரகமாகவும் விளங்குகிறார். இத்தலத்தில் மூன்றாம் பிறையுடன் அருள்பாலிக்கும் சந்திரமெளலீஸ்வரரை கடக ராசி உடையோர் வழிபட பொருட்செல்வம் மட்டுமின்றி மக்கள் செல்வம், உறவினர்கள் மரியாதை, தொழில் லாபம் உள்ளிட்டவையும் தேடி வரும். வராக நதிக்கரையோரம், பல்லவர்களின் கலைவண்ணத்தில் உருவான இந்தக் கோவில் மிகவும் பழைமையானது. இங்குள்ள சித்தர் சந்நிதியில் அமர்ந்து தியானிப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத வரமாகும். இத்தலத்தின் சன்னதியில் அருள்பாலிக்கும் துர்கை அம்மனை கடக ராசி புகர்பூச நட்சத்திரம், ஆயில்ய நட்சத்திரம் கொண்டோரும், கன்னி ராசியில் ஹஸ்தம், சித்திரை நட்சத்திரம் கொண்டோரும் வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும். அத்துடன் கோவிலின் முகப்பில் ஈசானியத்தை நோக்கி அருள்பாலிக்கும் வக்ரகாளியம்மனை வழிபட்டால் அரசு பதவி கிடைக்கும், திருஷ்டி தோஷங்கள் நீங்கும். கடகத்தின் ராசிநாதனாகிய சந்திரன் தேய்ந்து வளரும் தன்மை கொண்டது. அதனால், இந்த அம்மனை வலதுபக்கமாக ஐந்து முறையும், இடது பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து வழிபட வேண்டும். பஞ்சமி, அஷ்டமி, பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் இத்தலத்திற்குச் சென்று வழிபடுவதால் கூடுதல் பலன் கிடைக்கும். ஞாயிறு, வெள்ளிகளில் அரளிப்பூ, எலுமிச்சைப்பழ மாலை அணிவித்து அம்பாளை வணங்கிவர சகல தோஷங்களும் நீங்கி மகிழ்ச்சியான நாட்கள் உண்டாகும்.

நேர்த்திக்கடன்

வயது கடந்தும் திருமணம் பாக்கியமற்றவர்கள் இத்தலத்தில் தாலி, புடவை, மாலை உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வேண்டினால் விரைவில் திருமணம் நடைபெறும். இத்தலத்தில் உள்ள மரத்தில் குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுதல், எடைக்கு எடை காசு காணிக்கை செலுத்துதல் என பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். வக்கிர காளியை வேண்டி 1008 பால்குடி அபிஷேகம் செய்தல், அம்மனுக்கு சந்தனத்தால் அலங்காரம், அம்பாளுக்கு புடவை உள்ளிட்டவற்றையும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் சாத்துகின்றனர்.

தல அமைப்பு

மூலவர் சந்திரமவுலீஸ்வரர் மும்முக லிங்கமாகக் காட்சியளிக்கிறார். இந்த லிங்கத்தின் தெற்கே அகோர முகத்தில் வாயின் இரு ஓரத்திலும் கோரைப் பற்கள் காணப்படுகின்றன. பொதுவாக பிற கோவில்களில் கோபுர வாசலில் இருந்தே மூலவரை தரிசனம் செய்ய முடியும். ஆனால், இத்தலத்தில் ராஜகோபுரம், கொடிக்கம்பம், நந்தி, மூலவர் ஆகியன ஒரே நேர்க்கோட்டில் இல்லாமல் சற்று விலகிய நிலையில் இருப்பதால் வக்கிரத்திக் அடையலாமாக இதை காண முடிகிறது. மேலும், சனி பகவானின் வாகனமான காகம் பகவானுக்கு வலது புறமாக இருப்பது வழக்கம். ஆனால், இத்தலத்தில் மாறாக சனி பகவானுக்கு இடது புறத்தில் அமைந்துள்ளது. கி.மு.756ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக் கோவிலில் அம்பாள் சந்நிதிக்கு எதிரே மயான பூமி உள்ளது.

புராணக் கதை

வக்கிரகாளி அம்மன் சன்னதியினால் தான் இத்தலம் பலரால் அறியப்படுகிறது. இக்கோவில் வக்ரசாந்தி திருத்தலம் என்று பலரால் அழைக்கப்படுகிறது. வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்கிரகாளியாக அமர்ந்து விட்டால். ஆதி சங்கரர் அங்கு வந்து காளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார் என்பது இத்தலத்தின் வரலாறாக உள்ளது.

எப்படி செல்ல வேண்டும் ?

விழுப்புரத்தில் இருந்து சுமார் 29 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலை அடைய பேருந்து வசதிகள் சிறந்த முறையில் உள்ளன. மயிலம் செல்லும் பேருந்துகளும், சேதரப் பட்டு செல்லும் பேருந்துகளும் இக்கோவில் வழியே செல்லும். திருக்கனூர், கொடுக்கூர் செல்லும் பேருந்துகளும் திருவக்கரை செல்லும்.To Share :

இந்து மத சிறப்பு

ஹிந்துமதம் என்பது மனிதனுக்கு தெரிந்த மிகப் பழமையான...

108 திவ்ய தேசங்கள்

அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில், அழகர் கோவில்,...