இந்து மத பொன்மொழிகள்

ponmozhigal

அரியும் சிவனும் சிவ பூஜையில் கரடி புகுந்தது போல சிவனொடுக்கும் தெய்வம் தேடினும் இல்லை (சிவாத் பரதரம் நாஸ்தி) அரன் அதிகம் அரி அதிகம் என்போருக்கு பரகதி இல்லை (கம்பன்) அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயிலே மண்ணு தோத்திரத்துக்கு திருவாசகம் சாத்திரத்துக்கு திருமந்திரம், திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் சித்தம் போக்கு சிவம் போக்கு, ஆண்டி போக்கும் அதே போக்கு கல்லாடம் படித்தவனிடம் சொல்லாடாதே அன்பே சிவம் சிவத்தைப் பேணிற் தவத்திற்கழகு சிவனே என்று கிட சோற்றுக்குப் பின்னர்தான் சொக்கரும் மீனாட்சியும் எறும்புக்கும் படி அளப்பான் ஈசன்.

பிச்சைச் சோற்றிற்குப் பிறப்பு இல்லை (40)
என் கடன் பணி செய்து கிடப்பதே (அப்பர்)
நீரில்லாத நெற்றி பாழ்; நெய் இல்லாத உண்டி பாழ்
சும்மா இருப்பதே சுகம் (சும்ம இரு, சொல்லற)
தருமம் தலை காக்கும்
வானத்துக்கு வால்மீகி போருக்கு வியாசர்
காணாமற் கோணாமற் கண்டு கொடு (முக்கால சந்தியா வந்தனம் செய்யும் நேரம் பற்றிய பழமொழி )
வயிறு நிறைந்தால் வாய் வாழ்த்தும் (அன்ன தானப் பெருமை)
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்தது போல

வேலும் மயிலும் வேலை வணங்குவதே எமக்கு வேலை (பாரதி)
வேலுண்டு வினை இல்லை; மயிலுண்டு பயமில்லை
சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை
குன்று தோராடும் குமரன் (50)
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வதாற்போல்
கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்
நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறைத் தீர்ப்பு
கடவுளை நம்பினார் கைவிடப் படார்
கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண்மூடிப் போக
கற்றது கை மண் அளவு; கல்லாதது உலகளவு
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
மாதா பிதா குரு தெய்வம்!!!

To Share :
image

image

image