வேலை கிடைக்க அருள் தரும் தேவியின் மந்திரம்!

விரும்பும் துறையில் விரும்பிய வேலை கிடைக்க மஹாலட்சுமியின் உருவபடத்தின் முன் அமர்ந்து விளக்கேற்றி, தினமும் பதினாறு முறை பாராயணம் செய்து வரலாம். அருள் தரும் வரம் கிடைக்கவும் பொருளாதாரப் பிரச்னையில் இருந்து விடுபட்டு விரும்பும் துறையில் விரும்பிய வேலை கிடைக்கவும் கீழக்கண்ட மந்திரத்தை கூறலாம்.

mahalakshmi

மந்திரம்:

ஸ்ரீதேவி: அம்ருதோத்பூதா கமலா சந்த்ரசோபனா
விஷ்ணுபத்னீ வைஷ்ணவீ ச வராரோஹார்ங்க்ஞ்ச சார்ங்கிணீ
ஹரிப்ரியா தேவ தேவீ மஹாலக்ஷ்மீ ச ஸுந்தரீ.
மஹாலக்ஷ்மி ஸ்துதிமாலா

மந்திரத்தின் பொருள்:

உலக செல்வங்களுக்கு எல்லாம் அதிபதியான தேவதையே, தேவாசுரர்கள் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடந்த போது உதயமானவளே, தாமரை மலரை விரும்பி ஏற்பவளே, வெண்மை பொருந்திய சந்திரனனின் சகோதரியே, திருமாலின் உத்தம பத்தினியே, வைஷ்ணவியாய் வந்து அருள்பவளே, உன் பக்தர்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை உன் கையிலே இருக்கும் சார்ங்கம் என்ற வில்லால் அழிப்பவளே, தேர்வகளுக்கும் தேவியாய் இருப்பவளே,மாக்கோலத்தில் திகழ்பவளே, மஹாலக்ஷமியே, உன்னை தலை வணங்குகிறேன்.

அருட்பேராற்றலின் கருணையாலும் இறையருளாலும் குருவருளாலும் திருவருளாலும் மஹாலெட்சுமி தேவியின் துணையாலும் சித்தர்களின் அருளாலும், நான் மிகவிரைவில் விரும்பிய இடத்தில், விரும்பிய துறையில், விரும்பிய வேலை பார்ப்பேன்.

இவ்வாறு மஹாலக்ஷமியின் திருவுருவ படத்தின் முன் அமர்ந்து தினமும் பதினாறு சொல்லி வர விரும்பிய இடத்தில் விரும்பிய வேலை கிடைக்கும்.To Share :