முருகன், அகத்தியர் வளர்த்த தமிழை நாம் அழிக்காதிருப்போம்!

agathiyar tamil varalaru

தமிழைச் சரியாக எழுதுவோம்.

முறையாகத் தமிழை எழுதுவோம் ஒரு, ஓர் என இரண்டுமே ஒரே பொருளைத் தந்தாலும், எதை , எங்கே பயன்படுத்த வேண்டும், என்பதற்கு இலக்கணம் உண்டு. “ஓர்” என்பதை உயிரெழுத்திற்கு முன்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

உ.ம் _ ஓர் இல்லம், ஓர் எழுத்து

உயிர் மெய்யெழுத்திற்கு முன்பு “ஒரு” வர வேண்டும்

உ.ம் ._ ஒரு வீடு, ஒரு நூல்

murugan tamil varalaru

தமிழின் சிறப்பைச் சிதைத்து, தமிழை அழிக்கும் முயற்சிகளை வெளியே தெரியாமலேயே பரப்பி வருகின்றனர், தமிழ் பற்றாளர்களைப் போல காட்டிக் கொள்ளும் சில தமிழ் விரோதிகள். தமிழில் ஐ, ஔ _ என

உயிரெழுத்துகள் தனியே இருக்க, அதை விடுத்து அய்யப்பன் எனவும்; அய்யனார் எனவும்; அய்யா எனவும்; அவ்வையார் எனவும்; மய்யம் எனவும் எழுதுவது தமிழ்க் கொலை.

இன்றைய நிலையில், பத்திரிகை, தொலைக்காட்சி என எல்லாவற்றிலுமே

இவ்வாறே எழுதி தமிழைக் கொலை செய்கின்றனர். இப்படியே எழுதிக் கொண்டிருந்தால் நீண்ட காலங்கள் கழித்து தமிழின் நிலை என்ன? தமிழிலில் பன்னிரண்டு உயிரெழுத்துகள் என்பது வழக்கொழிந்து , பத்து உயிரெழுத்துக்களை மட்டுமே கொண்ட மொழி தமிழ்; இது ஐ, ஔ _ என்ற ஒலிகளுக்கு தனியே வரிவடிவங்கள் பழக்கத்தில் இல்லை; இது வளமற்ற மொழி! என்றாகிவிடாதா? ஐயப்பன், ஐயனார், ஐயா, ஔவையார், மையம் _ எனவே எழுதவேண்டும். அய், அவ் என எழுதுவோர், பெற்ற தாயின் கை, கால்களை உடைத்து இரசிக்கும் இழிபிறவிகள்! என்பதில் ஐயமில்லை.

temple news in tamil

இவ்வாறே பழங்காலத்தில் தற்போதைய ஒன்பது _என்ற சொல்லைக் குறிக்கத் தொண்டு என்றொரு சொல் வழக்கில் இருந்தது.

தொண்டு+ பத்து= தொன்பது. தொன்பது என்பதே மருவி “ஒன்பது” எனவாயிற்று. மக்கள் எக்காரணத்தாலோ, தொண்டு என்ற சொல்லை பயன்படுத்தாது விட்டொழிக்கவே, எல்லா எண்களும் அந்த வரிசையில் ஓர் இடம் முன்னே வந்தது. (அதாவது தொண்டு என்பதற்குப் பதில் ஒன்பது வந்தது. ஒன்பது _ என்பதற்குப் பதில் தொண்ணூறு வந்தது. மக்கள் செய்த குழப்பமே இது; ஆனால் இன்றளவும் நூறு என்பதற்கு முன் எப்படி தொண்ணூறு வந்தது? என அனைவரும் குழம்புகிறோம்.

குழப்பமான ஒன்றாக “ஒன்பது” என்ற எண் வரிசையை மாற்றி வைத்த பெருமை மக்களையே சாரும்! ஆனால் மொழியின் தவறை போல நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். எனவே உண்மையான தமிழ்ப் பற்றுள்ள அனைவரும் தயவுசெய்து ஐயா,
ஐயப்பன்
ஐயனார்,
மையம்,
ஔவையார் __ என எழுதுங்கள்.

murugan tamil varalaru

அதுவே தன் தாய்க்கு ஒவ்வொரு குழந்தையும் செய்யும் தொண்டு.

பிறையற தமிழை எழுதி, தமிழை அழிக்காதிருப்போம். தமிழ் எல்லா வளமும் உள்ள மொழி! அதை நாம் வளர்க்கத் தேவையில்லை; அதைச் சிதைக்காதிருந்தாலே போதும். சிவபெருமான் உருவாக்கி, அகத்தியருக்குக் கற்றுக் கொடுத்து, முருகப்பெருமானும், அகத்தியரும் வளர்த்த தமிழ் மொழியை நாம் அழிக்காதிருப்போம்.

-கீதப்பிரியை. உமாராதாகிருஷ்ணன்.

To Share :