முருகன் அறுபடை வீடு

Aarupadai Murugan

1. அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் - திருப்பரங்குன்றம் (மதுரை )

திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்கின்றது. மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ள இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

2. அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் - திருச்செந்தூர் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற தமிழ் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும்.

3. அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் - பழனி

பழனி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
இங்குள்ள மலையில் 18 சித்தர்களில் ஒருவரான போகரால் ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு சிலை செய்த புகழ் பெற்ற முருகன் மலைக்கோவில் இருக்கிறது. இவ்வூரில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருஆவினன்குடி கோவிலும் உள்ளது. 2013 ஆம் ஆண்டில் சங்ககால ஓவியங்கள் ஆண்டிப்பட்டி மலை, பழனியில் கண்டுபிடிக்கப்பட்டன.

4. அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் - சுவாமிமலை (தஞ்சாவூர் )

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில், ஆறுபடை வீடுகளில் ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த அருணகிரிநாதர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் 4ம் திருமுறையில் உள்ளன. 
இவ்வூரின் பிற பெயர்களில், திருவேரகம் என்பதும் ஒன்று. சுவாமிமலை வெண்கல சிலை வடித்தல் கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. இது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும்.

5. அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் - திருத்தணி (திருவள்ளூர் )

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 5வது வீடு அமர்ந்த நிலையில் அருணகிரியார் திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து விட்டு வந்து அமர்ந்து கோபம் தணிந்த தலம். 

அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறதாம்.

6.அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் -
சோலைமலை (மதுரை )

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலை ஸ்ரீ சோலைமலை முருகன் திருக்கோயில். 
மற்ற படைவீடுகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது. இங்கு திருமாலும், திருமுருகனும் குடிகொண்டு அருள்புரிகின்றனர். சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாய் இத்திருத்தலம் விளங்குகிறது.

To Share :
இந்து மத சிறப்பு

ஹிந்துமதம் என்பது மனிதனுக்கு தெரிந்த மிகப் பழமையான...

108 திவ்ய தேசங்கள்

அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில், அழகர் கோவில்,...