பூம்பாறை முருகன் கோயில்


Murugan-Kovil

கொடைக்கானலிருந்து 
18 கிலோ மீட்டர் 
தூரத்தில் உள்ளது 
பூம்பாறை 
கிராமம். 

இந்த 
முருகன் நினைத்தால் 
தான் நாம் இங்கு வர முடியும்” 

இந்த தேதியில், 
இந்த நேரத்தில் வரவேண்டும் என்பது அவன் விருப்பம் . மிகவும் சக்திவாய்ந்த நவபாசான முருகன்.

இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஐம்பொன் வெங்கலம் கற்களால் ஆன சிலைகள்தான் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன, 

அவை
1, பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை,

2. பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை. 

உலகிலேய நவபாஷான சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் மாமுனிசித்தர் போகர் என்ற மாமுனிவராகும். 

இவர் உருவாக்கிய பழனி மலை முருகன் மட்டும் தான் என்று எல்லோரும் அறிவர் 

ஆனாலும் பூம்பாறை முருகன் சிலையும் அவர்தான் நவபாஷானத்தால் உ ருவாக்கியவர் என்பது அறியாத தெரியாத செய்தியும் கூட, 

அதுபோல் அருள் பாலிப்பதிலும் பழனி முருகன் போன்றே அருள் தர வல்லவர் 

வாய்பு இருப்பின்
தரிசனம் செய்ய
தவறாதீர்

To Share :