27 நட்சத்திரக் கோயில்கள் !


nachathirakovilgal

இந்த உலகில் பிறக்கும் அனைத்து மனிதர்களும் ஏதாவது ஒரு நட்சத்திர நாளில் தான் பிறக்கிறார்கள். அஸ்வினி முதல் ரேவதி வரை மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவர் அவருடைய நட்சத்திரங்களுக்கு உரிய கோயிலில் சென்று வழிபடுவது வாழ்வில் மிகுந்த நற்பலன்களைத் தரும். ஒவ்வொருவருக்கும் பிடித்த கடவுளையோ, குலதெய்வத்தையோ வழிபடுவதோடு அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய கோயில் வழிபாடும் மிகவும் அவசியமாகும். இது அனுபவத்தில் கண்ட உண்மை. 27 நட்ச்திரங்களுக்குரிய லிங்கங்கள் உள்ள கோயில்கள் தமிழ்நாட்டில் இரண்டு உள்ளன. அங்கும் சென்று அவரவருடைய நட்சத்திர லிங்கத்திற்கு குறிப்பிட்ட நட்சத்திர நாளில் சென்று பூஜை செய்து வழிபடுவதும் நன்மை தரும். அந்த இரண்டு கோயில்களில் ஒன்று சென்னை திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமிகள் எனப்படும் ஆதிபுரீஸ்வரர் என்றும் அல்லது படம் பக்க நாதர் என்றும் அழைக்கப்படும் சிவன் கோவில் ஆகும். இது இந்து மதத்தில் வேத சாத்திர  முறைப்படி கட்டப்பட்ட முதல் கோயிலாகக் கருதப்படுகிறது. 27 நட்ச்திரங்களுக்குரிய லிங்கங்கள் உள்ள இரண்டாவது கோயில் திருவிடைமருதூரில் உள்ள சிவன் கோயிலாகும்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய கோயில்கள், இறைவன் பெயர், கோயில் இருக்கும் ஊர் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

வரிசை எண் நட்சத்திரங்களின் பெயர் கோயில் பெயர்
1 அசுவினி திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்
2 பரணி நல்லாடை அக்னீஸ்வரர் கோயில்
3 கார்த்திகை கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர் கோயில்
4 ரோகிணி காஞ்சிபுரம் பாண்டவதூதப்பெருமாள் கோயில்
5 மிருகசீரிடம் எண்கண் ஆதிநாராயணப்பெருமாள் கோயில்
6 திருவாதிரை அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் கோயில்
7 புனர்பூசம் வாணியம்பாடி அதிதீஸ்வரர் கோயில்
8 பூசம் விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில்
9 ஆயிலியம் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்
10 மகம் விராலிப்பட்டி மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
11 பூரம் திருவரங்குளம் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் கோயில்
12 உத்தரம் இடையாற்று மங்கலம் மாங்கல்யேஸ்வரர் கோயில்
13 அத்தம் கோமல் கிருபாகூபாரேச்வரர் கோயில்
14 சித்திரை குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் கோயில்
15 சுவாதி சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோயில்
16 விசாகம் பண்பொழி முத்துக்குமாரசுவாமி கோயில்
17 அனுஷம் திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோயில்
18 கேட்டை பசுபதிகோவில் வரதராஜப்பெருமாள் கோயில்
19 மூலம் மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்
20 பூராடம் கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்
21 உத்திராடம் கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
22 திருவோணம் திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்
23 அவிட்டம் கீழக் கொருக்கை பிரம்மஞான புரீஸ்வரர் கோயில்
24 சதயம் திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்
25 பூரட்டாதி ரங்கநாதபுரம் திருவானேஷ்வர் கோயில்
26 உத்திரட்டாதி தீயத்தூர் சகஸ்ரலட்சுமீஸ்வரர் கோயில்
27 ரேவதி காருகுடி கைலாசநாதர் கோயில்

இக்கோயில்களில்  இருக்கும் தெய்வங்களை குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது சென்று வணங்குவதன் மூலம் அவரவருடைய நட்சத்திர தெய்வங்களின் கருணைப்பார்வையைப்

பெற்று வாழ்வில் முன்னேறலாம், சிறப்படையலாம்.

To Share :