எட்டு என்ற எண் மிகவும் முக்கியத்துவம்

power of number 8

நமது வாழ்வில் நாற்பத்தி எட்டு என்ற எண் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஒரு மனிதன் தான் கைவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற பழக்கத்தை 48 நாட்கள் செய்யாமல் இருந்தால் அவனிடம் இருந்து அந்த பழக்கம் சென்றுவிடும். அதேபோல் தான் ஏற்றுக்கொள்ள வேண்டிய நல்ல பழக்கத்தை கஷ்டப்பட்டாவது தொடர்ந்து 48 நாட்கள் கடைப்பிடித்தால் அந்த நல்ல பழக்கம் தன்னுடைய அன்றாட வாழ்க்கை ஆகிவிடும்.

சித்தமருத்துவத்தில் 48 நாட்கள் ஒரு நோய்க்காக வைத்தியர்கள் பரிந்துரை செய்த மருந்தை சாப்பிட்டால் அந்த நோய் இருந்ததற்கான அடையாளம் இல்லாமல் சென்றுவிடும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த 48 என்ற எண்ணில் ஏதோ ஒரு சூட்சமம் இருக்கிறது. அது 12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் 9 கிரகங்கள் இவற்றின் கூட்டுத்தொகை 48. இந்த பிரபஞ்சத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்ற ராசிகள் நட்சத்திரங்கள் கிரகங்கள் ஆகியவை மனிதனுடைய உடலையும் மனதையும் கட்டுப்படுத்தும் சக்தியாக விளங்குகிறது என்று நம் முன்னோர்கள் கண்டுபிடித்து உள்ளார்கள். இந்த அரிய விஷயத்தை நமக்கு போதித்த முன்னோர்கள் வணங்குவதற்கு உரியவர்களே.

To Share :