பரஞ்சோதி மகான்


parajothimahan

பிறப்பு:

பரஞ்சோதி மகான் சென்னை மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டம் கான்சாபுரம் என்னும் சிறு ஊரில் ஒரு ஏழ்மை மிகுந்த குடும்பத்தில் நமது எளிமையில் பிறந்தார்.

குண்டலினி:

1919ஆம் ஆண்டில் பணியாளாக பர்மா சென்று விட்டபடியால் தனது தாய்மொழி போல் பர்மா மொழியையே பேசவும் எழுதவும் பழக வேண்டியதாயிற்று. அதே ஊரில் ஆலயம் ஒன்றில் வசித்து வந்த ஒரு பெரியவர் மூலம் இரங்கூன் புதுக்காண் ரோட்டின் அருகாமையில் உள்ள பழைய குதிரை மைதானத்தில் 1938, நவம்பர் 7 இல் உபதேசம் பெற்றார்.1939 செப்டம்பர் மாதம் இந்தியா திரும்பினார். 1944ஆம் ஆண்டு முதல் இந்தியா மட்டுமின்றி மேலை நாடுகள் முழுவதும், ஆங்காங்கே உள்ள சீடர்களைக் கொண்டு அந்தந்த நாடுகளிலும், நகரங்களிலும் சபைகளை ஏற்படுத்தி குண்டலினி உபதேசத்தை வழங்கி வந்தார். "உலக சமாதான ஆலயம்" சென்னையில் 1946 ஜூலை 20 இல் தொடங்கப்பட்டது.

இந்த 'தவம்' மிகச் சிறப்பான ஒன்று, மனித வாழ்வுக்கு மிக அற்புதமான நலத்தை அளிக்கக் கூடிய ஒன்று. இதை பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் நான் போதித்தே தீருவேன். இந்த தவத்தின் ஆற்றலே அதைப் பெறுகிறவரை வழி நடத்தும் என்று கூறிச் சென்று விட்டார். 'சரி, இனி உன் விருப்பம்... நான் கொடுத்த சக்தியை, பயிற்சியை நானே திரும்பப் பெறுவது சாத்தியமில்லாதது' என்று கூறி மகானை வாழ்த்தி அனுப்பி விட்டார்.

மகானின் பயணம் தொடர்ந்தது. மதுரையிலும், தஞ்சையிலும் பின்னர் சென்னையிலும் உலக சமாதான ஆலயத்தை உருவாக்கி அனைவருக்கும் போதித்தார். மதுரையில் பல்லாண்டு காலங்கள் தொடர்ந்து தங்கியிருந்து சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். வணங்காதே, வணங்க வைக்காதே... ஞானம்தான் விஞ் 'ஞானம்', தலைக்கு மேலே (சொர்க்கலோகம்?)யும் ஒன்று மில்லை, காலுக்கு கீழேயும் (பூலோகம்?) ஒன்றுமில்லை... இதை தவத்தால் அறிக ! சந்தோஷம்... மகானின் சொற்பொழிவுகளில் இந்த வார்த்தைகள் மிகவும் பேசப்பட்டன.

... 'இது மறை பொருள் ஒன்றுமில்லை, ஆர்வமுள்ளவர்கள் யாராயினும் வாருங்கள், கட்டணம் ஒன்றுமில்லை' என்று அனைவருக்கும் இந்த ஞான சக்தியை பொதுவுடமை ஆக்கினார்.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், இந்தோனேஷியா என்று உலகநாடுகளில் எல்லாம் மகான் தேடிப்போய் 'தீட்சை'யைக் கொடுத்து மக்களை தன்னைப் போலவே ஞானத் தெளிவு நிலைக்கு கொண்டு வரும் பணியை மேற்கொண்டார்.

கானின் தவ வலிமை குறித்து கூறும் ஆந்திர மக்கள், "ஒருமுறை ஆந்திராவில் ஜல்லடியன் பேட்டை கிராமத்தில் மக்கள் காளிக்கு நரபலி கொடுப்பதை கேள்விப்பட்டு அங்கு நேரே மகான் வந்து விட்டார். அந்த மக்களிடம் 'நரபலி கொடுப்பது தவறு, எந்த தெய்வமும் நரபலியைக் கேட்பதில்லை' என்று அவர்கள் வழியிலேயே போய் எடுத்துச் சொன்னார். ஆனால், கிராம மக்களோ, மகானின் வார்த்தையைக் கேட்கும் நிலையில் இல்லை. மகானோ' இந்த ஊர் எல்லையில் போய் நான் இருக்கிறேன், உங்கள் மனதை மாற்றிக் கொண்டால் வந்து சொல்லுங்கள்' என்று சொல்லி விட்டு அந்த ஊர் எல்லையில் போய் அமர்ந்து கடும் தவத்தில் மூழ்கிவிட்டார். மகான் தவத்தில் அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே அந்த காளிகோயில் கதவு மூடிக்கொண்டு விட்டது. நாங்கள் (ஊர் மக்கள்) எவ்வளவோ முயன்றும் கதவைத் திறக்க முடியவில்லை. அவ்வளவுதான் பதறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவந்து, 'சாமீ, எங்களை மன்னிச்சுடுங்க, தெரியாம தப்பு பண்ணிட்டோம், நீங்க சொன்னது மாதிரி நாங்க பூசணிக்காயை மட்டும் பலி கொடுக்கிறோம், கோயிலை திறந்திடுங்க' என்று உறுதி கொடுத்த பின்னரே மீண்டும் மகான் அவர்கள் கோயிலை திறந்தார்.

ஆந்திராவின் ஜல்லடியன் பேட்டையில் (ஜக்கம்மா காளி கோயில்) மகானின் இந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக, அந்தக் கோயிலின் வாசலில் மகான் படத்தை வைத்து மகானை வணங்கிய பின்னரே இன்றளவும் எங்கள் கிராமத்து மக்கள் கோயிலுக்குள் போகின்றனர்" என்கின்றனர்.

இறப்பு:

ஜனவரி 7, 1981ம் ஆண்டு இயற்கை எய்தினார்.

To Share :