ராம தேவர் சித்தர்

ramadevar alagarmalai

ஏணிஎன்ற வாசியை நீ பாய்சிப்பாரு
என்ன சொல்வேன் சோதிமயங் காணுந்தானே
சோதியதிர் சொக்கிடுவாய் சொரூபாரூபம்
தோன்றுமே வாசியென்ற மனத்தினாலே
சாதிபேதம் வையாதே தரணிமீது
சாற்றுவேன் மனத்தானே சிவந்தானையா
ஆதியென்ற ரவிமதியும் மனத்தினாலே
அரகரா வெண்சாரை மனத்தினாலே
பாதிமதி சடையணிந்த தம்பிரானும்
பரிவாக உன்னுள்ளே நோக்கிப்பாரே
கள்ளமில்லா மனதையடா நோக்கிப்பாரு
கருவான கருவிளமே கலந்துசேரே !!
-யாகோபு வாத சூத்திரம்

விளக்கம்:

வாசியோகத்தை சரிவர செய்து வந்தால் சோதியை காணலாம், கண்டபின்பு அதனுள் மனதை வைத்து சொக்கி வந்தால் சிவனை காணாலாம். மனதுதான் சிவன். ஜீவனே சிவன். அதைவிடுத்து சாதிபேதம் பேசி, சஞ்சலத்தில் ஆட்ப்பட்டு வாழ்நாட்களை வீணடிக்க வேண்டாம் என்கிறார் சித்தர் இராமதேவர்

To Share :