அருள்மிகு சடையப்பர் திருக்கோயில்

sadaiyaparkovil

  கோயில் :   அருள்மிகு சடையப்பர் திருக்கோயில்  
  கோயில் வகை: :   சடையப்பர் கோயில்
  மூலவர் :   சடையப்பர் 
  பழமை :500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி : அருள்மிகு சடையப்பர் திருக்கோயில் தென்செட்டி ஏந்தல், கல்வராயன் மலை விழுப்புரம் மாவட்டம்.  
  ஊர் :   தென்செட்டி ஏந்தல்  
  மாவட்டம் :   விழுப்புரம் [ Villupuram ] - 
  மாநிலம் :   தமிழ்நாடு  [ Tamil nadu ]
  நாடு :  இந்தியா [ India ]


இங்கு வந்து குறைகளைச் சொல்லி பரிகாரம் கேட்கும் மக்கள், தாங்கள் வேண்டியது நிறைவேறியதும் சாமியிடம் சொன்ன பரிகாரத்தின்படி நிறைவேற்றாவிட்டால், தானே சென்று தனக்கு வேண்டியதை எடுத்துக்கொள்வார்கள் சடையப்பர்கள் என்பது சிறப்பு. பெரிய சடையப்பருக்கு யானை வாகனமும், சின்ன சடையப்பருக்கு குதிரை வாகனமும் உள்ளன. இவற்றின்மீது வேட்டைக்குப் போகும் இவர்களுக்கு ஆணிகள் பொருத்திய காலணிகள் உண்டு.

இந்த தெய்வங்களை நம்பி வந்து தங்கள் குறைகளைச் சொல்லி தீர்வு வேண்டினால், அவற்றை நிச்சயம் நிறைவேற்றி வைப்பார்கள். பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாமல் இருந்த ஒரு தம்பதிகள் இந்த தெய்வங்களிடம் வேண்டிக்கொண்டபோது குழந்தைப்பேறு கிடைத்தது. இதற்கு நன்றிக்கடனாக மூன்று பவுன் தாலிச் சங்கிலியை காணிக்கையாகக் கொண்டு வந்து செலுத்தினார்கள்.

இப்படிப்பட்ட சக்திமிக்க தெய்வங்களை சேலம், கடலுர், பெரம்பலூர், சென்னை, திருச்சி, திருவண்ணாமலை, கரூர், தம்மம்பட்டி, வயலூர், திருவண்ணாமலை பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இவ்வூரில் உள்ள எல்லா மக்களும் இத்தெய்வங்களை மிகுந்த பக்தியோடும் கட்டுப்பாடுகளோடும் வழிபட்டு வருகின்றனர். முன்காலத்தில் இந்த ஊரில் பட்டுநூல் தயாரித்த செட்டியார் இன மக்கள் அதிகம்பேர் வாழ்ந்துள்ளனர். அதனால்தான் இந்த ஊருக்கு செட்டி ஏந்தல் என்ற பெயர் உருவானது. 

To Share :