சனீஸ்வரா காப்பாத்து!

saneeswara-god

சனி பகவானை மனமார வணங்கிச் சரணடைந்தால், எந்தச் சங்கடமும் இல்லை. சந்தோஷத்துக்குக் குறைவுமில்லை.

சனி பகவான் கோபக்காரரா. ஆமாம். பாசக்காரரா. நிச்சயமாக. எல்லவாற்றுக்கும் மேலாக, தவறு செய்பவர்களைக் கண்டு கோபம் கொள்வார். நல்லவர்களைக் கண்டு, பாசம் பொழிவார். இன்னும் முக்கியமாகச் சொல்லவேண்டும் என்றால்... தவறென்றால் தவறுதான். கண்டிப்பதிலும் கறார் காட்டுவதிலும் தண்டனை வழங்குவதிலும் சனீஸ்வரர்... ஓர் நீதியரசர்!

ஆகவே, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்கள், சத்திய வாழ்க்கையை வாழ்பவர்கள், சனி பகவானைக் கண்டு பயப்படத் தேவையில்லை.

‘அட... நல்லதுக்குத்தான் காலமில்லை. நல்லவங்களுக்குத்தான் காலமில்லை’ என்றெல்லாம் பொருமுகிறவர்கள், சனிக்கிழமை நன்னாளில், சனீஸ்வரருக்கு உகந்த நாளில், கோயிலுக்குச் சென்று, நவக்கிரகங்களில் வீற்றிருக்கும் சனீஸ்வரர் முன்னே நின்று, மனதார வேண்டுங்கள்.

‘சனீஸ்வரா... நான் எந்தத் தப்பும் பண்ணலைப்பா. நீதான் காப்பாத்தணும்’ என மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள். நல்லவர்களைக் காத்தருள்வதுதான் சனி பகவானின் தலையாய வேலையே!

ஆகவே, சனி பகவானைச் சரணடையுங்கள். சனி பகவான், நம்மைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டால்தான் பிரச்சினை. நாம் சனீஸ்வரரையும் சனிபகவான் வழிபாட்டையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வாழ்ந்தால், நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

சனி பகவான் இருக்கிறார். நல்ல விஷயங்களுக்கெல்லாம் எப்போதும் துணை நிற்பார். சங்கடங்களையெல்லாம் தீர்ப்பார். சந்தோஷங்களையெல்லாம் தந்தருள்வார் சனீஸ்வரர்!


To Share :