இந்து மதத்தின் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கிறது

இந்து மதத்தின் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கிறது. ஒவ்வொரு அசைவிலும் அறிவுபூர்வமான சிந்தனைகள் நிறைந்திருக்கிறது. உதாரணமாக, தாங்க முடியாத துயரத்தோடு கோவிலுக்குச் செல்கிறோம். இறைவா காப்பாற்று! என்று கலங்கி நின்று கர்ப்பகிரகத்தில் உள்ள தெய்வ வடிவத்தை பார்க்கும்போது, தெய்வத்தின் வலது கை பொறு என்பது போன்ற அபய முத்திரையையும், இடது கை தனது பாதத்தை காட்டி ஹஸ்த முத்திரையையும் அடையாளம் காட்டுகிறது. இது அபயஹஸ்த முத்திரை எனப்படும்.

 scientific reason behind hindu practices

இதன் பொருள் பொறுமையுடன் என்னைச் சரணடைந்து விடு! என்பதாகும். அடுத்து இறைவனுடைய கரங்களில் மான், மழு, சூலம், சங்கு, சக்கரம், போன்ற ஆயுதங்கள் இருக்கும். முருகனின் கரங்களில் உள்ள வேல் அறிவின் விளக்கமாகும் . அறிவு என்பது கூர்மையாகவும் அகண்டதாகவும் ஆழமானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

அடுத்து, சூலம் அம்மன் கரங்களில் இருக்கும். இது மூன்றும் முனைகளுடன் விளங்குகிறது.இது இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்பது போன்ற சக்திகளை ஞாபகப்படுத்துகிறது. திருவேங்கடவன் கரங்களில் சங்கு, சக்கரம் ஓங்கார ஒலியுடன் உலகை சுற்றி பிரமாண்டமாய் இயங்கும் பூமியின் இயக்கத்தை ஞாபகப்படுத்துகிறது.

science behind tamil culture

கிராம தேவதைகளின் கரங்களில் கிராம மக்களின் கற்பனை திறனுக்கு ஏற்ற வகையில், "என்னை சிரமப்படுத்தும் பேய் பிசாசுகளிடம் இருந்து என்னை காப்பாற்று மாறு மகா சக்தியுடன் விளங்கும் தெய்வத்திடம் என்னுடைய கோரிக்கையை வைத்து விட்டேன் அந்த தெய்வம் என்னை காப்பாற்றும்" என்ற நம்பிக்கையை தரும் வகையில் தான் கிராம தேவதைகளின் கரங்களில் தங்கள் கற்பனைத் திறனுக்கு ஏற்ப பிரமாண்டமான ஆயுதங்களை வைத்தார்கள். மொத்தத்தில் தங்கள் வாழ்க்கையை நம்பிக்கையின் அடிப்படையில் அமைத்துக் கொண்டார்கள். எனவேதான், ஆயிரம் ஆண்டுகால அடிமை வாழ்வில் அரசியல் கைவிட்டுப் போனது. ஆனால் ஆன்மீகம் காப்பாற்றப்பட்டது. ஏனென்றால் மக்களை ஆன்மிகம் காப்பாற்றியது.

To Share :