திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவக்கம்

thirunallar temple

காரைக்கால் : காரைக்கால் திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வர மற்றும் சனீஸ்வரபகவான் கோவிலில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை தொடங்கியது. காரைக்கால் திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வர தேவஸ்தானம் சனீஸ்வரபகவான் கோவிலில் வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள மஹாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு பணிகள் திவிரமாக நடைபெற்று வருகிறது.

சனீஸ்வரபகவானை தரிசனம் செய்ய நாட்டில் பல்வேறு பகுதியிலிந்து பக்தர்கள் தினம்தரிசனம் செய்கின்றனர். மேலும் இக்கோவிலில் கடந்த 12ஆண்டுகள் பின் வரும் பிப்.,11ம் தேதி திங்கள் கிழமை காலை 9.10 முதல் 10.10க்கு அனைத்து விமானங்களுக்கு மகாகும்பாபிஷேகத்தை நடைபெறவுள்ளது.இதனால் கடந்த 3ம் தேதி விக்னேஸ்வர பூஜைகளுடன் துவக்கியது.நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் முதலாம் கால யாகசாலைபூஜை தொடங்கியது.நேற்று காலை இரண்டாம் கால யாகசாலைபூஜை சிறப்பாக நடைபெற்றது.வேதமங்கலங்களுடன் வாக்கியமுழுக்க சிவாச்சாரியர்கள் தர்பாரண்யேஸ்வரர்,சனீஸ்வரபகவான்,அம்பிகை உள்ளிட்ட யாகசாலைகளில் சிறப்பு பூஜைகள் ஈடுப்பட்டனர்.

மேலும் ஸ்ரீ தர்பாரண்யேசுவரர்,ஸ்ரீ சனீஸ்வரபகவான், பிரணாம்பிகை, தியாகராஜர், சொர்ணகணபதி, சுப்ரமணியர், நடராஜர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கோவில் வசந்தமண்டபத்தில் 44 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டது.இதில் காரைக்கால் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த 150க்கு மேற்பட்ட சிவாச்சாரியர்கள் யாகசாலையில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.மேலும் வரும் 11ம் தேதி எட்டாம் கால யாகசாலை முடிந்து காலை 7.20 மணிக்கு பிரதான கும்ப மூர்த்திகள் புறப்பாடு,காலை 9.10 முதல் 10.10க்கு எழுநிலை மாடங்களோடு ஓங்கிநிற்கும் ராஜகோபுரம், தர்பாரண்யேஸ்வர், சனீஸ்வரபகவான், அம்பாள்,விநாயகர், முருகன் மற்றும் கோவிலை நுழைவுவாயில் உள்ள மூன்று நிலை கோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. மேலும் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து மாவட்ட போலீஸ்சார் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 500க்கு மேற்பட்ட போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தவுள்ளனர். மேலும் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களை எவ்வித சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

To Share :