கல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி! எம பயம் போக்கும் ஞீலிவன நாதர்!
கல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலியில் வைகாசி பூஜை

இன்னும் பொண்ணுக்கு கல்யாண வரன் தகையலையே...’ என்று பெண்ணைப் பெற்றவர்கள் புலம்பக் கேட்டிருப்போம். ‘நல்ல படிப்பும், கை நிறைய சம்பளமும்னு உத்தியோகமும் இருந்தும், என்ன புண்ணியம். பையனுக்கு கல்யாணம் மட்டும் தள்ளிக்கிட்டே போவுதே’ என்று மகனைப் பெற்றவர்களும் கலங்கித் தவிப்பார்கள். கவலையே வேண்டாம்... திருப்பைஞ்ஞீலி எனும் கல்யாண வரம் தந்தருளும் அற்புதமான தலத்துக்கு வந்து, வேண்டிக் கொண்டால் போதும்... சீக்கிரமே கல்யாண மாலை தோள் சேரும் என்கிறார்கள் பக்தர்கள்!

Thiruppainjeeli Vaikasi Pooja Tamil

கல்யாணத் தடை, ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் சரியில்லை, களத்திர தோஷம் என்று எதுவாக இருந்தாலும் சரி... ஒரே ஒரு முறை, திருப்பைஞ்ஞீலி தலத்துக்கு வந்து, பரிகாரங்களைச் செய்து சிவனாரை வேண்டிச் சென்றால் போதும்... விரைவில் கல்யாண வரம் வந்துசேரும். வீட்டில் கெட்டிமேளம் கேட்கும் என்பது என்பது உறுதி! அதனால்தான் இந்தத் தலத்தில் வருடம் 365 நாளும் திருமண பரிகாரம் நடந்துகொண்டிருக்கிறது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது மண்ணச்சநல்லூர். இங்கிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பைஞ்ஞீலி. 

ஒருகாலத்தில் ஞீலி வனமாகத் திகழ்ந்த பூமி இது. ஞீலி என்றால் வாழை. பைஞ்ஞீலி என்றால் பசுமையான வாழை. வாழைத் தோப்பாக இருந்த இடத்தில் சிவனார் குடிகொண்டிருப்பதால், ஈசனுக்கு ஸ்ரீஞீலிவனநாதர் எனத் திருநாமம் அமைந்தது. 

Thiruppainjeeli Vaikasi Pooja Tamil

இங்கே, வாழை மரமே ஸ்தல விருட்சம். இங்கு, வாழைக்கு தாலி கட்டி, பரிகாரம் செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்! தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கல்யாண வரம், நீண்ட ஆயுள் ஆகியவற்றை வழங்கி, எம பயத்தையும் போக்கி அருள்கிறார் ஸ்ரீஞீலிவனநாதர். அம்பாள் : ஸ்ரீநீள்நெடுங்கண்ணி. அதாவது ஸ்ரீவிசாலாட்சி அம்பாள்.  

கல்யாணத் தடை, களத்திர ஸ்தானத்தில் தோஷம் என்று எதுவாக இருந்தாலும் திருப்பைஞ்ஞீலி தலத்துக்கு வந்து, பரிகாரங்களைச் செய்து சிவனாரை வேண்டிக் கொண்டால், விரைவில் கல்யாண வரம் கிடைக்கப் பெறலாம்! 

அற்புதமான இந்தத் தலத்தில், சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையை முன்னிட்டும் வைகாசி மாதத்தின் நிறைவையொட்டியும் இன்று சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன. சிவனாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்! 

மகாவிஷ்ணு, இந்திரன், காமதேனு, ஆதிசேஷன், வாயுபகவான், அக்னி பகவான், சூதமாமுனிவர் முதலானோர் இந்தத் தலத்தில் வழிபட்டு, சிவனருள் பெற்ற இந்தத் தலத்தில் சிவ தரிசனம் செய்தால், ஞானமும் யோகமும் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

Yama Dharmaraja Swami Temple

அதேபோல், சஷ்டியப்த பூர்த்தி எனப்படும் அறுபதாம் கல்யாணம், சதாபிஷேகம் என்று சொல்லப்படும் எண்பதாம் கல்யாணம் முதலான வைபவங்களை, இங்கு வந்து நடத்தினால், இன்னும் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ்வார்கள். அவர்கள் சந்ததியும் சிறந்து விளங்கும்!

To Share :