குழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்

tiruvannamalai-temple

சூரியன் நெருப்பு கிரகம், செவ்வாய் நெருப்பு கிரகம். ஆக இரண்டும் நெருப்பு கிரகம். இதில் ஒன்று பலமிழக்க, அந்த நெருப்பை மீண்டும் பலமாக்க வேண்டும்.

ஆக இப்போது நமக்குத் தேவை அக்னிஸ்தலம்; அது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை... பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலம் என்பதை அறிந்திருப்பீர்கள். அங்கே குடிகொண்டிருக்கும் தெய்வம் அண்ணாமலையாரே நமக்கு துணை செய்வார். புத்திர பாக்கியம் தந்தருள்வார்.

திருவண்ணாமலை, சிவ ஸ்தலமாக இருப்பினும் அங்கே முருகனின் அற்புத நிகழ்வுகள் ஏராளம். எனவேதான் அது முருகனுக்கும் உகந்த ஆலயம் என்று போற்றப்படுகிறது.

அந்த இறைவனின் அக்னி, உங்கள் உடலில் உள்ள குறைபாடுகளை புடம்போட்ட தங்கம் போல் சுத்தமாக்கித் தருவார், எனவே அங்கு சென்று வந்தாலே உங்கள் குறை தீரும்.

அடுத்து... வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்து வழிபட நல்லதே நடக்கும்.

செவ்வாய், சந்திரனோடு இணைந்து பலவீனம் அடைய முருகனுக்கு பால் காவடி எடுத்தல், பாலபிஷேகம் செய்தல் போன்றவை நலம் தரும்.

யாத்ரீகர்களுக்கு, வழிப்போக்கர்களுக்கு, பாதயாத்திரை மேற்கொள்பவர்களுக்கு நீர்மோர் வழங்குதல், தண்ணீர்ப் பந்தல் அமைத்தல் போன்றவை நல்ல பலன்களை வாரி வழங்கும்.

செவ்வாய், கேதுவோடு இணைந்தால் முற்றிலும் தன் பலத்தை இழப்பார். உண்மையில் இதுதான் புத்திரபாக்கியத்தை இல்லாமலே செய்துவிடும் அமைப்பு என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இதற்கு என்ன பரிகாரம்? கேது என்பது தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் இயல்பை உடையது.

எனவே இதற்கான பரிகாரம் என்பதும் உங்கள் உடலை வருத்தி கடுமையான முறையிலேயே இருக்கும்.

சஷ்டி விரதம்:-

“சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பதன் அர்த்தம் சஷ்டியில் விரதம் இருந்தால் கர்ப்பப்பை என்னும் அகப்பையில் கரு உண்டாகும் என்பதே.

எனவே சஷ்டி விரதம் கடைபிடிக்க வேண்டும். புத்திர பாக்கியம் நிச்சயம்!

கிருத்திகை விரதம்:

கார்த்திகேயனை நினைத்து கிருத்திகை விரதம் இருப்பதும் சிறப்பு ( கிருத்திகை நட்சத்திரத்தின் வடிவம் (சவர)கத்தி. எனவே தேவையில்லாததை நீக்கி சுத்தப்படுத்தும் வேலையைச் செய்யும்) கருப்பையில் இருக்கும் குறைகளை நீக்கி கருவை பலப்படுத்தும்.

பழநி பாதயாத்திரையில் பங்கெடுப்பது, காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல் முதலானவை கேதுவின் காரகத்துவத்தை மட்டுப்படுத்தும்.

செவ்வாய், சனியோடு இணைந்து பலவீனம் அடையும்போதுஅய்யனார் அல்லது ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வருவது மிகச்சிறந்த பலனை தரும். சந்தான பாக்கியத்தை வழங்கி அருளும்.

ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சென்று வந்தவர்களுக்கு “மணி” போன்ற குழந்தை பாக்கியம் இருப்பது, நாம் எல்லாரும் அறிந்த ஒன்று.

சரிங்க! இதெல்லாம் எனக்கு இருக்கும் வேலைப் பளுவுக்கு எப்படி முடியும்? என்பவர்களுக்கு...

தாம்பத்யத்தை பரிந்துரைக்கும் முறையில் தொடர்ந்தாலே புத்திர பாக்கியம் உண்டாகும்.

இப்போது சித்தர்கள் உரைத்த பொன் மொழி ஒன்றைப் பார்க்கலாம்,

தினம் இரண்டு

வாரம் இரண்டு

மாதம் இரண்டு

“ வருடம் இரண்டு

தினம் இரண்டு:- ஒருநாளைக்கு இருவேளை உணவு

வாரம் இரண்டு:- வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.( எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் விந்து மற்றும் கர்ப்பப்பை பலப்படும்)

மாதம் இரண்டு:- மாதத்தில் இரண்டு முறை மட்டுமே தாம்பத்யம் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் ஏறக்குறைய அனைவரும் அதீத உடல் உறவை வைத்துக்கொள்கின்றனர், அது தவறு. விந்துவில் உயிரணுக்கள் பலவீனமாகும், இப்படி பலவீனமான உயிரணுக்களால் உண்டாகும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பதே இல்லாமல் போகும்.

வருடம் இரண்டு:- ஆண்டுக்கு இருமுறை பேதிக்கு மருந்தெடுத்து வயிற்றைச் சுத்தம் செய்யவேண்டும்.

To Share :