உணவு மருத்துவம்

unavu maruthuvam

இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு, உணவுப் பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவையே பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு மூல காரணமாகின்றன. மருத்துவம் சார்ந்த தேவைகளுக்கென்று குறிப்பிட்ட தொகையை ஒதுக்கும் அளவுக்கு உடல்நிலையைக் கவனத்தில் கொள்ளாமல், ஓர் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதனால் பல நோய்களுக்கு ஆளாகிறோம். நாம் ஏன் நோய் பாதிப்பில் சிக்கிக்கொள்கிறோம்?

இதற்கான விடை தெரிந்துவிட்டால் நோயற்ற, நலமான வாழ்க்கையை வாழ முடியும். அந்த விடை, மிகவும் எளிமையானது. எதை, எப்போது உண்ண வேண்டும் என்பது தெரிந்துவிட்டால் போதும். எதையும் கால, நேரம் பார்த்துச் செய்ய வேண்டும் என்பார்கள். அது சுப, துக்க நிகழ்வுகளுக்கு மட்டுமல்ல, உண்ணும் உணவுக்கும்தான். இதைக் கடைப்பிடிக்காததன் விளைவே, நோய் நம்மைப் பின்தொடர்கிறது. பித்தம், வாயு, கபம் ஆகிய மூன்றில் இருந்துதான், உடல் ஆரோக்கியக் குறைபாடே ஆரம்பமாகிறது. உணவு உண்பதற்கும் நேரம், காலம் உண்டு. காலை 6 முதல் பகல் 12 மணிவரை உடலில் 3 மடங்கு அமிலம் உற்பத்தியாகும் என்பதால், பித்தத்துக்கான சாத்தியம் அதிகம். இந்த நேரத்தில் புளித்த மாவால் தயாரிக்கப்படும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

பகல் 12 முதல் மாலை 6 மணிவரை வாயு உருவாகும் நேரம். இந்த நேரத்தில் கிழங்கு, பருப்பு, பயறு வகைகளைத் தவிர்க்க வேண்டும். மாலை 6 முதல் காலை 6 மணிவரை (சூரியன் மறைந்த பிறகு) கபம் உருவாகும் நேரம். சூரியக் கதிர்கள் இல்லாததால் பாக்டீரியா எளிதில் நம் உணவில் தஞ்சமடையும். இந்த நேரத்தில் உணவைச் சூடாக உண்ண வேண்டும்.

To Share :