தெய்வம் இருப்பது எங்கே?

where does god live

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று"
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"

இவை அவ்வைப் பாட்டியின் அமுத வரிகள் இது ஷண்மத வழிபாடு என்று போற்றப்படுகிறது. இந்த வழிபாட்டு முறையை நமக்கு வழங்கிய மகான் ஸ்ரீ ஆதிசங்கரர்.

இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி என்ற வழிமுறையில் ஆன்மீகம் என்பது என்ன? இது நம்மால் எளிய முறையில் கடைப்பிடிக்க முடியும் வகையில் அமைந்துள்ளதா? அல்லது வழிபாடுகள் விரதங்கள் போன்றவைகள் கடுமையாக கட்டமைக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்த ஆய்வுக் குறிப்புகள் நமது வாழ்க்கை முறை நமக்கு அளித்த சுதந்திரம். எதுவரை நம்மை அனுமதிக்கின்றது எங்கே நம்மை நில் என்று கட்டளையிடுகிறது என்றெல்லாம் இந்தத் தொடரில் யோசிப்போம்.

முதலில் குறிப்பிட்ட படி ஷண்மத வழிபாடு என்பது "வைணவம்" என்ற பெயரில் பெருமாள் வழிபாடும் "சைவம்" என்ற பெயரில் சிவ வழிபாடும் "சாக்தம்" என்ற வகையில் அம்மன் வழிபாடும் "கௌமாரம்" என்ற பெயரில் ஸ்ரீ முருக வழிபாடும் "கணாபத்யம்" என்ற பெயரில் விநாயகர் வழிபாடும் "சௌரம்" என்ற வகையில் சூரிய வழிபாடும் நமக்கு வழிகாட்டு முறைகளை இங்கே வடிவமைக்கப்பட்டுள்ளது.

where does god live

இவைகள் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இவை அனைத்தும் ஒரு கற்பக மரத்தின் வேறு வேறு கிளைகள் தான். கடவுள் சிவபெருமானையும் அம்மனையும் நமக்கு அப்பா அம்மாவாக உருவகப்படுத்தி; அம்மாவுடன் பிறந்த அண்ணனாக ஸ்ரீ நாராயணப் பெருமாளை அடையாளப்படுத்தி விநாயகக் கடவுளையும் முருகப்பெருமானையும் அண்ணன் தம்பிகளாக்கி இந்த அண்ணன் தம்பிகளை சிவபெருமானின் குழந்தைகளாக அடையாளம் கண்ட இந்து சமூகமே ஒரு குடும்பம் என்பதை நாம் உணர வேண்டும்.

இவை தவிர குலதெய்வ வழிபாடு, இவைகளுடன் சேர்த்து முன்னோர் வழிபாடு. இத்தனை வகையான வழிபாட்டு முறைகளை நமக்கு வழங்கிய நமது முன்னோர்கள் எந்த இடத்திலும் இவைகளில் ஏதேனும் ஒரு வழிபாட்டு முறையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும், எதிர்த்துப் பேசக்கூடாது என்று நம்மை மிரட்டவோ கட்டாயப்படுத்தவோ இல்லை.

வாழ்க்கை காலச்சுழற்சியில் சூழ்நிலைகள் மாறும். எதிர்பாராத அனுபவங்கள் வரும். அந்த அனுபவங்களின் அடிப்படையில் கடந்த காலத்தில் மறுத்துப் பேசிய பல விஷயங்களை ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்ற மன நிலை வரும். அப்போது, நான் எனது என்ற மனோபாவம் மாறி இறைவா.... என்று இறைவனை துணை கிடைக்கும் நிலையில் மனம் இருக்கும். இப்போது, தன்னையும் மீறி தனது கால்கள் கோயிலை நோக்கிச் செல்லும் .எவர் தயவும் தேவையில்லை என்று நினைத்த மனது யாராவது பேச்சுத் துணைக்கு வர மாட்டார்களா என்று தவிக்கும்.

உறவுகளை எதிர்த்துப் பேசி ஏளனம் செய்த வாழ்ந்த காலம் மாறி இப்போது என் அத்தை மகனின் சித்தப்பா பேரன் கல்யாணத்திற்கு என்னை அழைக்க மாட்டார்களா என்று மனம் ஏங்கும். அப்போது தான் தற்போதைய தன்னுடைய இருப்பும் புரியும். எப்போதும் இருக்கின்ற இறைவன் இருப்பும் புரியும். இப்போது இறைவனை நோக்கி கைகள் தொழும். கண்களில் இருந்து நீர் துளிகள் விழும். ஆக ஆன்மீக வாழ்க்கை தான் நாம் வாழும் முறை. கடவுள் மறுப்பு, நாத்திக வாழ்க்கை என்பது சிற்றறிவுக்கு எட்டிய குப்பைகளின் தொகுப்பு.

இறைவனை நம்புங்கள் அல்லது தற்போது இறைவனை நம்பாமல் எதிர்காலத்தில் நம்ப போகின்ற நாத்திகனாக இருங்கள். கவலை இல்லை மனித குலத்திற்கு அடிப்படையான பணிவு முக்கியம். என் வாழ்க்கையில் நடந்து முடிந்துவிட்ட பல காரியங்களுக்கு சரியான காரணம் கண்டுபிடிக்க முடியாத என்னால் என்னை மீறி நடக்கின்ற காரியங்களுக்கு நானே காரணம் என்று என்னை நானே பாராட்டிக் கொள்வது நகைப்புக்குரியதாகும்.

நமக்கு முன் வாழ்ந்த ஐந்தாவது தாத்தாவின் பெயரை கூட அறிந்துகொள்ள முடியாத ஒருவர் இறைவனை நம்புகின்றவரைப் பார்த்து முட்டாள் என்று ஏளனமாக பேசுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

deivam irupathu enge

நான் விரும்பியவை நடக்காமல் போக, விரும்பாதவைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்போது பக்கத்து வீட்டுக்காரர் என் பாதுகாப்புக்கு வரமுடியாது. அவரோடு நான் நட்பாக இருந்தால் ஆறுதல் கூற வருவார் அவ்வளவு தான். ஆனால், தெய்வ நம்பிக்கை நல்லதே நடக்கும் என்ற தைரியம் கொடுக்கும். தீயவை நடந்திருந்தால் எதிர்த்துப் போராடி ஜெயித்து விட நம்பிக்கை கொடுக்கும். மகிழ்ச்சி என்பது நம் கையில் உள்ள புதிய ரூபாய் நோட்டு கட்டுகள் போன்றவை. கவலை என்பது நம்மை அறியாமல் நாம் வாங்கிவிட்ட சேதமான செல்லாத நோட்டுகள் போன்றவை.

இந்த நொடியில் நம்மிடம் நமக்குத் தேவையான புதிய ரூபாய் நோட்டுகளும் இல்லை. நாம் அறியாமல் பெற்றுவிட்ட செல்லாத நோட்டுகளும் நம்மிடமே தங்கி விடவும் இல்லை. ஆக மகிழ்ச்சியும் நம்மிடம் நிரந்தரமாக இருப்பதில்லை. கவலை வந்தது உண்மைதான் ஆனால் அது என்னிடமே நிரந்தரமாக இருந்துவிடவும் இல்லை. எதுவுமே நிரந்தரம் இல்லை என்ற நிலையான உண்மையை புரிந்து கொண்டால், எதிரே வருகின்ற எல்லோரிடமும் பணிவு வரும். வரவேண்டும்....

மனிதகுலத்திற்கு அதன் நிம்மதியான வாழ்விற்கு பணிவு அவசியம். சரி! யாரையெல்லாம் பணிவது? முதலில் அம்மாவை அடுத்து அப்பாவை தொடர்ந்து ஆசிரியரை. அம்மா, அப்பா. ஆசிரியர் ஆகியோரைப் பணிவதற்கும் போற்றுவதற்கும் அவசியம் இருக்கிறது. பணிந்து போற்றி தான் ஆக வேண்டும். ஆனால், நம் நிலை என்ன என்று தெரியாமல் எனக்கு ஏதாவது கொடு என்று நம்மிடம் யாசித்து நிற்கின்ற ஒருவரையும் பணிந்து போற்றுமாறு கூறினால் காரணம் என்ன?.

இதைத்தான் இந்து தர்மம் மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ, என்று நமக்கு ஞாபகப்படுத்துகிறது. அம்மா, அப்பா, ஆசிரியர் தவிர எனக்கு ஏதாவது கொடு என்று கேட்பவரும் போற்றுதலுக்குரியவர்கள். இறைவனை வணங்கி, தொடர்ந்து இறைவன் இருப்பை மற்றவர்களுக்கு புரிய வைத்தவர்களை இறைவனுக்கு இணையாக வைத்துப் போற்றியது ஹிந்து தர்மம்.

where does god reside

12 ஆழ்வார்களும், அறுபத்து மூன்று நாயன்மார்களும் ,18 சித்தர்களும், இறைவனைப் புரிந்து கொண்டார்கள். நமக்குப் புரிய வைத்தார்கள், அவர்கள் இறைவனாகவே ஆகிப்போனார்கள் அதாவது இறைவனை விட இறைவன் பக்தர்களுக்கு மகிமை அதிகம் என்று போதித்தார்கள், நாமும் இறைவனின் பக்தர்கள்தான். இதைத்தான் நமது தெய்வப்புலவர் திருவள்ளுவர்

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்
உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"
என்று கூறினார்.

மொத்தத்தில் இந்து சமுதாயம் ஒரு குடும்பம் என்று கூறி, அதற்குரிய இலக்கணமாக அன்பு, தர்மம் என்பதை மட்டுமே நிலைநிறுத்தி இறைவனை பிறர்க்கு உணர்த்தியவர்களை இறைவனுக்கு இணையாக போற்றி, காலம் கடந்து நிற்கும் நமது ஆன்மீகம் எந்த வகையிலும் கட்டாயம் இல்லாத வழிகாட்டுதல்தான்.

where does god come from

கடலோடு கலந்து விட்ட நீரும் கடலாகவே மாறி விடுவதை போல் நிரந்தர நிஜமான இறை அனுபவத்தை பெற கூடுதல் தகுதி எதுவும் தேவையில்லை.பக்தனாக வாழ்ந்தாலே போதும். இந்த அற்புதமான ஆன்மீக வாழ்வில்அறியாமை என்ற சொல்லுக்கே இடமில்லை. இவைகள் தான் உண்மையாகவே பகுத்து அறியப்பட்ட பகுத்தறிவு. மற்றவை எல்லாம், போலிகள்! வைரத்தின் முன்னால் வைக்கப்பட்ட கண்ணாடி கோலிக்குண்டுகள். நமது ஆன்மீகத்தில் அத்தனையும் அறிவு! இந்த அறிவு நமக்கு எப்படி உணர்த்தப்படுகிறது? தொடர்ந்து காவி தேசத்தில் கவனிப்போம். தொடர்ந்து பயணிப்போம்! உறவுகளாய் உயர்வினை நோக்கி!

நன்றி!!To Share :