இயற்கை மருத்துவம்
iyarkai maruthuvam

ஆங்கிலத்தில் சாப்ரன் எனவும் ஹிந்தியில் கேசர் எனவும் அழைக்கப்படும் குங்குமப்பூ அதிசயமான ஒன்று. ஒரு பூவின் உலர்ந்த சிவப்பு நிற மகரந்த காம்பு உயர்ந்த வாசனையுடன் இருப்பது அனைவரையும் ஈர்க்கும் ஒன்று. ஆனால் இதனை மிக சிறிதளவு வாங்குவதற்கே பலமுறை யோசிக்க வைக்கும். விலை உயர்ந்த பொருள். ஒரு அவுன்ஸ் உயர்ந்த குங்குமப் பூ சுமார் 4500 ஊதாநிற பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்டுகின்றது. ஒரு பூவில் 3 மகரந்த காம்புகள் கிடைக்கும். இதனை சிறிதளவு உணவில் (பிரியாணி, மசாலா, பால், இனிப்பு வகை) சேர்த்தால் போதும், மிக உயர்ந்த நறுமணத்தினைக் கொடுத்து விடும்.

குங்குமப்பூவின் மருத்துவ பலன்கள்

  • புற்று நோய்க்கான ஆராய்ச்சியில் குங்குமப் பூவில் பல வேதிமப் பொருட்கள் புற்று நோய் எதிர்ப்பாக உள்ளதால் பெருத்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது.
  • இலுப்பு, கர்ப்பப் பைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்க உதவும் என்ற காரணத்தினாலேயே குங்குமப்பூ கர்ப்பிணிப் பெண்களுக்கு சிபாரிசு செய்யப்படுகின்றது. இது வயிற்றில் பிடிப்புகளை நீக்க உப்பிசம், வாயு சேர்வதை தவிர்க்க பாலுடன் கலந்து அருந்த அறிவுறுத்தப்படுகின்றது. ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ ஆலோசனை பெற்றே குங்குமப்பூ எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • மன உளைச்சல், மனச் சோர்வு உள்ளவர்களுக்கு குங்குமப் பூவினை எடுத்துக் கொள்ளும்போது செரடோனின் என்ற பொருள் உடலில் சுரப்பதன் மூலம் மன உளைச்சல் நீங்குகின்றது.
  • வயது கூடும்போது வரும் கண் தெரியாமை பாதிப்பு குங்குமப்பூ எடுத்துக் கொள்வதால் பாதிப்பின் கடுமை குறைகிறது. பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்கவும் குங்குமப் பூ உதவுகின்றது.
  • ஆஸ்துமா நோயாளிகளுக்கு குங்குமப் பூ ஒரு வரப்பிரசாதம். நுரையீரலில் உள்ள திசுக்களின் வீக்கத்தினை குறைத்து ரத்த நாளங்களை சீராக வைக்கின்றது. இதனால் காற்றுக் குழாய்கள் சீராக இயங்குகின்றன.
  • குங்குமப் பூ ஜீரண சக்தியினை கூட்டுகின்றது. வயிற்றின் உள்ள தசைகளை ரிலாக்ஸ் செய்வதன் மூலம் வலி, அசி டிடி, சிறுநீரகம் பிரச்சினை, கல்லீரல் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகின்றது.
  • To Share :