27 நட்சத்திரக் கோயில்கள் !
nachathirakovilgal

 இந்த உலகில் பிறக்கும் அனைத்து மனிதர்களும் ஏதாவது ஒரு நட்சத்திர நாளில் தான் பிறக்கிறார்கள். அஸ்வினி முதல் ரேவதி வரை மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவர் அவருடைய நட்சத்திரங்களுக்கு உரிய கோயிலில் சென்று வழிபடுவது வாழ்வில் மிகுந்த நற்பலன்களைத் தரும். ஒவ்வொருவருக்கும் பிடித்த கடவுளையோ, குலதெய்வத்தையோ வழிபடுவதோடு அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய கோயில் வழிபாடும் மிகவும் அவசியமாகும். இது அனுபவத்தில் கண்ட உண்மை. 27 நட்ச்திரங்களுக்குரிய லிங்கங்கள் உள்ள கோயில்கள் தமிழ்நாட்டில் இரண்டு உள்ளன. அங்கும் சென்று அவரவருடைய நட்சத்திர லிங்கத்திற்கு குறிப்பிட்ட நட்சத்திர நாளில் சென்று பூஜை செய்து வழிபடுவதும் நன்மை தரும். அந்த இரண்டு கோயில்களில் ஒன்று சென்னை திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமிகள் எனப்படும் ஆதிபுரீஸ்வரர் என்றும் அல்லது படம் பக்க நாதர் என்றும் அழைக்கப்படும் சிவன் கோவில் ஆகும். இது இந்து மதத்தில் வேத சாத்திர  முறைப்படி கட்டப்பட்ட முதல் கோயிலாகக் கருதப்படுகிறது. 27 நட்ச்திரங்களுக்குரிய லிங்கங்கள் உள்ள இரண்டாவது கோயில் திருவிடைமருதூரில் உள்ள சிவன் கோயிலாகும்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய கோயில்கள், இறைவன் பெயர், கோயில் இருக்கும் ஊர் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

நட்சத்திரங்கள்           இறைவன் இறைவி பெயர்              கோயில் இருக்கும் ஊர்    

அஸ்வினி  ஸ்ரீபவ ஔஸத ஈஸ்வரர் கோயில்   திருத்துறைப்பூண்டி
 
பரணி   ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில்  நல்லாடை மயிலாடுதுறை அருகில் 
மிருகசீரிஷம்  ஸ்ரீ ஆதி நாராயணர் கோயில்    என்கண் கொறடாச் சேரி தஞ்சாவூர் மாவட்டம் 

புனர்பூசம்   ஸ்ரீ அதிதீஸ்வரர் கோயில்     வாணியம்பாடி வேலூர் மாவட்டம் 

பூசம்   ஸ்ரீ அட்சயபுரீஸ்வரர் கோயில்    விளாங்குளம்  தஞ்சாவூர் மாவட்டம் 

ஆயில்யம்    ஸ்ரீ கற்கடகேஸ்வரர் கோயில் (நண்டான்கோயில்)  திருந்துதேவன்குடி கும்பகோணம் 

மகம்    ஸ்ரீ மகாலிங்கசுவாமி கோயில்  தவசிமடை திண்டுக்கல் 

பூரம்   ஸ்ரீ ஹரி தீர்த்தேஸ்வரர் கோயில்  திருவரங்குளம் பட்டுக்கோட்டை 

உத்திரம்   ஸ்ரீ மாங்கலேஸ்வரர்    கோயில்   இடையாற்று மங்கலம் திருச்சி மாவட்டம் 

ஹஸ்தம்    ஸ்ரீ கிருபகூபரேஸ்வரர் கோயில்    கோமல் கும்பகோணம் 

சித்திரை  ஸ்ரீ சித்ர ரத வல்லப பெருமாள் கோயில்  குருவித்துறை சோழவந்தான் மதுரை 

சுவாதி     ஸ்ரீ பிரசன்ன குந்தளாம்பிகை தந்த்ரீஸ்வரர்
 மற்றும் ஸ்ரீ சுந்தரராஜபெருமாள் கோயில்   சித்துக்காடு பூந்தமல்லி அருகில் 
 விசாகம்     ஸ்ரீ முருகன் கோயில்     திருமலை  தென்காசி  அருகில் நெல்லை மாவட்டம் 

அனுஷம்   ஸ்ரீ லக்ஷ்மிபுரீஸ்வரர் கோயில்   திருநின்றியூர்
 மயிலாடுதுறை அருகில்   கேட்டை  ஸ்ரீ வரதராஜர் கோயில்   பசுபதி கோயில் தஞ்சாவூர் மாவட்டம்
மூலம்   ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயில்  மப்பேடு தக்கோலம் அரக்கோணம் அருகில்  
பூராடம்  ஸ்ரீ ஆகாசபுரீஸ்வரர் கோயில்   கடுவெளி தஞ்சாவூர் மாவட்டம் 

உத்திராடம்   ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் கீழப்பூங்குடி 
மேலூர் அருகில் திருவோணம்   ஸ்ரீ அலர்மேல்மங்கை உடனுறை 
                பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில்  திருப்பாற்கடல் காவேரிப்பாக்கம்  

அவிட்டம்       ஸ்ரீ புஷ்பவல்லி உடனுறை பிரம்ம 
                       ஞான புரீஸ்வரர் கோயில்     கொருக்கை கும்பகோணம்
 
சதயம்    ஸ்ரீ கருந்தார்குழலி உடனுறை 
                        அக்னீஸ்வரர் கோயில்      திருப்புகலூர் நன்னிலம் அருகில்
 
பூரட்டாதி    ஸ்ரீ காமாட்சி உடனுறை 

                            அக்னீஸ்வரர் கோயில்     திருக்காட்டுப்பள்ளி தஞ்சாவூர் மாவட்டம்

உத்திரட்டாதி   ஸ்ரீ சகஸ்ர லக்ஷ்மீஸ்வரர் கோயில்    தீயத்தூர்  புதுக்கோட்டை மாவட்டம் 

ரேவதி ஸ்ரீ கருணாகரவல்லி உடனுறை 

 ஸ்ரீ கைலாசநாதர் கோயில்   காருக்குடி தாத்தய்யங்கர்பேட்டை 
இக்கோயில்களில்  இருக்கும் தெய்வங்களை குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது சென்று வணங்குவதன் மூலம் அவரவருடைய நட்சத்திர தெய்வங்களின் கருணைப்பார்வையைப் பெற்று வாழ்வில் முன்னேறலாம், சிறப்படையலாம்.

To Share :